அழுகிய நிலையில் தாயும் 2 வயது மகனின் உடலும் மீட்பு! - பினாங்கு!

- Sangeetha K Loganathan
- 01 Jul, 2025
ஜூலை 1,
Georgetown Bukit Gambir அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தாயின் உடலும் அவரின் 2 வயது மகனின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.41 மணிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள் சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் புகார் அளித்த நிலையில் வீட்டைச் சோதனையிட்டதில் அவர்கள் இருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 40 வயதுள்ள தாய் 2 வயதுள்ள மகன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களின் சடலத்தின் அருகிலிருந்து வலி நிவாரண மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
Seorang wanita berusia 40 tahun dan anak lelakinya berumur 2 tahun ditemui mati dalam keadaan reput di sebuah pangsapuri di Bukit Gambir, Georgetown. Polis menemui pil penahan sakit di lokasi dan siasatan lanjut sedang dijalankan bagi mengenal pasti punca sebenar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *