விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்தின் போஸ்டர் வெளியீடு!

- Muthu Kumar
- 27 Jan, 2025
நடிகர் விஜய் தி கோட் படத்தை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, அபிராமி, பிரியாமணி, கௌதம் மேனன் ,பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் முதல் படம் இதுதான். அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு இதுதான் கடைசி படமாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந் கேசரி என்ற படத்தில் ரீ மேக் தான் விஜய் நடித்துவரும் இந்த படம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழு அதை ஏற்க மறுத்தாலும், பகவந் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை அவர்கள் பெற்றுள்ள தகவலும் அதை உறுதிப்படுத்துகிறது.
இந்த சூழலில் குடியரசு தினமான நேற்று, விஜய் நடித்து வரும் 69வது படத்தின் தலைப்பை, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட இருப்பதாக படக்குழு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் தலைப்பை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். ஏற்கனவே நாளைய தீர்ப்பு என படத்துக்கு டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வைரலானது.
ஆனால் இப்போது விஜய் நடித்துவரும் 69வது படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் பின்னணியில் இருக்க, கூலிங்கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலாக இடுப்பில் கைவைத்தபடி நின்றிருக்கும் விஜய் செல்பி போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த படத்தின் தலைப்பை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்சன்ஸ் அறிவித்துள்ளது.
ஆனால் விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு, கடைசி படமும் நாளைய தீர்ப்பு என்று அமைவது இதுவரை எந்த நடிகருக்குமே கிட்டாத வாய்ப்பு, அதுவும் அரசியல் தலைவராக மாறிய அவருக்கு கடைசி படத்தின் பெயர் நாளைய தீர்ப்பு என அமைவது கனகச்சிதமாக பொருந்தும் என ரசிகர்கள் கருதிய நிலையில், கடைசி நேரத்தில் ஜனநாயகன் என டைட்டிலை மாற்றி தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது, தளபதி ரசிகர்களை சற்று ஏமாற்றமடைய செய்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *