ஹிஷாமுடினை மீண்டும் அம்னோவில் சேர்ப்பதா?உச்சமன்றம் முடிவுசெய்யும்!

- Muthu Kumar
- 27 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 27-
அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேனை மீண்டும் அம்னோவில் சேர்க்கக் கோரும் தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை கட்சியின் உச்சமன்றத்திடமே தாம் விட்டு விடுவதாக அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று தெரிவித்தார்.
கட்சியிலிருந்து தாம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவரிடமிருந்து மேல்முறையீடோ மன்னிப்புக் கடிதமோ இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே, அவரின் நிலை குறித்து உச்சமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிஷாமுடின் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு இதுவரை அவர் ஆட்சேபம் தெரிவிக்காமல் உள்ளார் என்று கிராமம் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான ஸாஹிட் சொன்னார்.
உச்சமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு ஏதுவாக ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஸி தீர்மானமொன்றைக் கொண்டு வரவேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
செம்புரோங் அம்னோ தொகுதியின் முன்னாள் தலைவருமான ஹிஷாமுடின் ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி விதிமுறைகளை மீறி நடந்ததற்காக அவர் மீது அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அவர் மீதான இடைநீக்கத்தை மீட்டுக் கொள்ளக்கோரி செம்புரோங் அம்னோ தொகுதி அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
Presiden UMNO Zahid Hamidi menyatakan keputusan menerima semula Hishammuddin Hussein ke dalam parti diserahkan kepada Majlis Tertinggi. Tiada rayuan atau surat permohonan maaf diterima daripada beliau sejak digantung enam tahun pada Januari 2023.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *