பினாங்கு மாநகராட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் தரமற்ற சாலைகள் குறித்து விவாதம்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, ஜூலை 1-

பினாங்கு மாநில மாநகராட்சியின் நிர்வாகக் குழு செயலவைக் கூட்டம் இங்கு மாதந்தோறும் நடைபெறுகின்ற நிலையில், அவ்வாறு நேற்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலப் பொதுமக்கள் நலனுக்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறான நலத் திட்டங்கள் தொடர்பிலும், அவ்வாறு தீர்வு காணப்படாத விவகாரங்களால் தலை தூக்குகின்ற சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அந்த வரிசையில் மாநகர் மன்ற உறுப்பினர்களுள் ஒருவரான விக்னேசன் என்ற சுரேஷ். இங்கு தரமற்ற நிலையில் காணப்படும் பல சாலைகளைத் தொட்டு பரிந்துரைத்ததுடன், அவற்றால் நிகழ்கின்ற விபத்துகள் குறித்தும் பட்டியலிட்டு, கூட்டத்திலிருந்த பலரது கவனத்தை ஈர்த்ததோடு, இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தகுந்த முறையில் தீர்வு காண வேண்டி, தனது கோரிக்கையை முன் வைத்தார்.

அதே வேளையில் மாநிலத்தின் சாக்கடைகள் நிலைமை, தெரு விளக்குகள் பிரச்சினை ஆகியன குறித்தும் இக்கூட்டத்தில் பேசிய
விக்னேசன், இங்கு முறையாக செப்பனிடப்படாதவாறு தோற்றமளிக்கும் சாலைகளால், வாகனமோட்டிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் சங்கடங்களைத் தொட்டு எடுத்துரைத்ததோடு, அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டியும் கேட்டுக் கொண்டார்.

சாலைகளை செப்பனிடும் தலையாயப் பொறுப்பு பொதுப் பணித் துறையினரின் கடமை என்ற போதிலும், இடையிடையே ஏற்படும் பள்ளங்கள். குழிகள் மற்றும் கரடுமுரடான நிலைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு மாநகர் மன்றத்தினுள் அடங்கியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும். இதனை அலட்சியமாகக் கருதினால் நிலைமை மோசமடைந்து விடுமென்றும் கூட்டத்தினருக்கு அறிவுறுத்தினார்.

மோசமான சாலைகளால் மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் தொடங்கி மே மாதம் வரையில் மொத்தம் 23,534 விபத்துகள் நிகழ்ந்திருப்பதை போக்குவரத்து காவல் துறை தரப்பில் புள்ளி விவரமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவலை சுட்டிக் காட்டிய விக்னேசன். இவற்றால் 167 உயிர்கள் பலியாகி விட்டிருப்பதையும் பட்டியலிட்டதோடு, நாட்டில் இது மோசமான புள்ளி விவரமாகும்
என்பதையும் புலப்படுத்தினார்.

சாலைகளை செப்பனிடுவதற்கு ஒப்பந்தப்படுத்தப்படும் குத்தகையாளர்கள் தத்தம் பொறுப்புகளை முறையுடன் ஆற்றாமல் சில இடங்களை கைவிட்டு விடும் அவலங்களாலேயே விபத்துகள் நிகழ்வதற்கு காரணமென்று தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட விக்னேசன், ஆதலால் இந்த விவகாரத்தில் ஒழுங்குமுறை அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டுமெனவும், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் அவசியமென்று. வலியுறுத்தினார்.

இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் மாநிலத்தில் பொது மக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு வரி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள காலக்கெடு தொடர்பிலும், அதனைப் பின்பற்றாமல் அலட்சியம் புரிவோருக்கு எதிரான அபராதம் மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை இக்கூட்டத்தில் மாநகர மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் கூட்டத்தினருடன் இணைந்து செய்தியாளர்களுக்கு காட்டிய அங்கமும் இடம் பெற்றது.
Dalam mesyuarat Majlis Bandaraya Pulau Pinang, ahli majlis Vignesan Suresh membangkitkan isu jalan rosak dan kemalangan akibatnya. Beliau menuntut penyelesaian segera serta pengawasan ketat terhadap kontraktor. Isu cukai penilaian juga turut dibincangkan.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *