கொள்கைப் பிடிப்பு காரணத்தினால் அம்னோவிடம் மேல்முறையீடு செய்யப் போவதில்லை-ஹிஷாமுடின் !

- Muthu Kumar
- 02 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 2-
கொள்கை சம்பந்தப்பட்ட விசயமாக இருப்பதால், கட்சியிலிருந்து தாம் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து தாம் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று. அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் கோடிகாட்டியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, தமக்கு எதிரான இடைநீக்கம் குறித்த தகவலை தாம் தெரிந்து கொண்ட விதத்தை, இன்ஸ்தாக்கிராமில் பதிவேற்றம் செய்துள்ள ஒரு காணொளியில் ஹிஷாமுடின் நினைவு கூர்ந்தார்.கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது தொடர்பிலான ஓர் அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர் மூன்று
நாட்களுக்குப் பிறகுதான் பெற்றிருக்கின்றார்.
"அக்கடிதத்தில் எந்த ஒரு விளக்கமோ அல்லது தகவல்களோ இல்லை. இன்று வரையில், நான் என்ன குற்றம் செய்தேன் என்பதற்கான அதிகாரப்பூர்வ மற்றும் தெளிவான தகவல்களை நான் பெற்றிருக்கவில்லை. "என்னை தற்காத்துக் கொள்ளவோ அல்ல நான் அழைக்கப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் நான் விசாரிக்கப்படவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
நியாயம் கிடைக்காது என்பது தமக்குத் தெரியும் என்பதால், தமக்கு எதிரான இடைநீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வதில்லை என்று தாம் முடிவு செய்ததாகவும் ஹிஷாமுடின் கூறினார்.
"நான் ஒரு பிடிவாதக்காரன் என்று பலர் சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், இது உறுப்பினர் அல்லது பதவி சம்பந்தப்பட்ட விசயம் அல்ல. அம்னோவில் நான் எப்போதும் கடைப்பிடித்து வரும் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி சம்பந்தப்பட்டவையாகும் என்று அவர் கூறினார்.
Hishammuddin Hussein tidak akan membuat rayuan terhadap penggantungan enam tahun dari UMNO kerana isu itu melibatkan dasar parti. Beliau tidak diberi maklumat jelas atau peluang mempertahankan diri. Baginya, isu ini berkaitan prinsip integriti dan keadilan dalam UMNO.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *