தனியார் நிலத்தில் கட்டினாலும் கோயிலை இடிக்க கூடாது! – பி.கே.ஆர் MP வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
தலைநகரில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliamman ஆலயம் தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அதை இடிப்பது பொறுத்தமானச் செயல் இல்லை என Pasir Gudang நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Abdul Karim வலியுறுத்தினார். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதைவிடவும் முக்கியமானது உணர்வும் நம்பிக்கையும். பிறர் நம்பிக்கையால் அமைக்கப்படும் சமயத் தலங்கள் நிலைத்து இருக்க அரசாங்கம் வழிவகுக்க வேண்டுமே தவிர பிரச்சனையைக் கிளறிவிட்டு குளிர் காய கூடாது என பி.கே.ஆர் கட்சியின் மூத்த தலைவருமான Hassan Abdul Karim தெரிவித்தார்.
மக்களிடையே ஒற்றுமை உணர்வை விதைத்து ஒற்றுமை அரசாங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை அரசாங்கத்தின் மடானிக் கொள்கை வேறுபாடுகளற்ற மலேசியர்களை உருவாக்குவது. சகிப்புத் தன்மையுடன் பிற சமய விவகாரங்களை மக்கள் ஏற்கும்படியாக அரசாங்கம் செயல்பட வேண்டும். சமய விவகாரங்களைச் சட்டத்தின்படி மட்டுமே அணுக வேண்டிய அவசியமில்லை என்றும் மக்களின் உணர்வோடும் அணுக வேண்டும் என Pasir Gudang நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Abdul Karim கேட்டுக்கொண்டார்.
MP Pasir Gudang Hassan Abdul Karim menegaskan bahawa kuil Dewi Sri Pathrakaliamman tidak seharusnya dirobohkan meskipun dibina di tanah persendirian. Beliau menekankan kepentingan keharmonian sosial, toleransi agama dan peranan kerajaan dalam menjaga kepercayaan rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *