சரியான தூக்கம் இல்லை என்றால் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மனச்சோர்வு நிச்சயம்!

top-news
FREE WEBSITE AD

உடலுக்குச் சாப்பாடு எந்தளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்குத் தூக்கமும் முக்கியமானது. சரியான அளவுக்குத் தூக்கம் ஒருவருக்குக் கிடைக்கவில்லை என்றால் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

உடலுக்கு  முக்கியமானதாகத் தூக்கம் இருக்கும் நிலையில், ஒருவர் எத்தனை நேரம் தூங்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் புத்துணர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்குத் தூக்கம் ரொம்பவே முக்கியமானது. நமது உடல் சரிவர இயங்க தூக்கம் இவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், சரியான அளவுக்குத் தூக்கத்தைப் பெற முடியாமல் பலரும் போராடுகிறார்கள்.

ஒரு நாள் ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கினால் கூட அதில் இருந்து மீண்டு வர நான்கு நாட்கள் ஆகும் என்கிறார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் வல்லுநர்.. ஆனாலும், இன்னும் பலருக்குத் தூக்கம் என்பது எட்டாத கனியாகவே இருக்கிறது.

தூக்கம் தொடர்பாகக் கடந்த பிப்ரவரி 2024இல் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் சுமார் 3இல் ஒருவர் தேவையான அளவுக்குத் தூங்குவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. சரியான அளவுக்குத் தூக்கம் இல்லை என்றால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படும். அவ்வளவு ஏன் மன ரீதியான பாதிப்புகள் கூட ஏற்படுமாம்.

அதேபோல தூக்கம் என்பது ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும்.. குழந்தைகளுக்கு அதிக நேரம் தூக்கம் தேவை.. அதே நேரம் வயதாக வயதாகத் தேவையான தூக்கம் என்பது குறைந்து கொண்டே இருக்கும். நேரத்துடன் சேர்ந்து தூக்கத்தின் தரம், தூக்கமின்மை சிக்கல், கர்ப்பம் எனப் பல காரணங்கள் ஒருவருக்கு எத்தனை நேரம் தூக்கம் தேவை என்பதைத் தீர்மானிக்கும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. ஒருவருக்கு வயது வாரியாக எவ்வளவு தூக்கம் தேவை? அமெரிக்காவின் சிடிசி அதாவது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதற்கான பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது..

பிறந்த குழந்தைகள் (0-3 மாதங்கள்): 14-17 மணி நேர தூக்கம் தேவை.. அதேநேரம் 4-12 மாத குழந்தைகளுக்கு 12-16 மணி நேரமும் 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11-14 மணி நேரமும் தூக்கம் தேவை.

அதேபோல 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு 10-13 மணி நேரம் வரை தூக்கம் தேவைப்படும் நிலையில், 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 9-12 மணி நேரமும், 13 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு 8-10 மணி நேரமும் தூக்கம் தேவை. மேலும், 18 முதல் 60 வயதானோருக்கு 7 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூக்கம் தேவைப்படும் நிலையில், 61 முதல் 64 வயது வரையிலான வயதானோருக்கு 7-9 மணி நேரமும், 65+ வயதானோருக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது.

எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைப் போலவே எப்படித் தூங்குகிறோம் என்பதும் ரொம்பவே முக்கியமானது. மோசமான தூக்கம் என்பது தொடர்ந்தால் அது நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *