RM70,000 லஞ்சம் பெற்றதாக JKR இயக்குநர் கைது!

top-news

ஜூன் 26,


குத்தகையாளரிடமிருந்து RM70,000 லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் பொதுப்பணித் துறையின் முன்னாள் இயக்குநர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு Sesyen நீதிமன்றம் கூடுதல் நிபந்தனையுடன் RM20,000 ஜாமின் வழங்கியது. சிலாங்கூரில் கட்டிட மறுசீரமைப்புத் தொடர்பானக் குத்தகைக்குக் கடந்த 2024 ஆகஸ்ட் முதல் ஜனவரி 23 வரையில் குத்தகை நிறுவனத்திடமிருந்து அவர் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 51 வயது Datuk Ir. Norman Md Rabani சிலாங்கூர் மாநிலப் பொதுப்பணித் துறையின் முன்னாள் இயக்குநராகப் பொறுப்பிலிருந்த போது 4 முறை ஒரே தனியார் குத்தகை நிறுவனத்திற்குக் குத்தகையை வழங்கியிருப்பதைக் கண்டறிந்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்காக 51 வயது Datuk Ir. Norman Md Rabani-ஐ கைது செய்தது. லஞ்சம் பெற்றது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொள்ளும்படி சிலாங்கூர் மாநில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் குற்றம்சாட்டப்பட்டவருக்குக் கூடுதல் நிபந்தனையுடன் RM20,000 ஜாமின் வழங்கியது.


Bekas Pengarah JKR Selangor, Datuk Ir. Norman Md Rabani didakwa menerima rasuah RM70,000 daripada syarikat kontraktor bagi kerja ubah suai bangunan. Beliau dibebaskan dengan jaminan RM20,000 sementara SPRM menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *