பேருந்தில் SEAT BELT அணியாத 109 பயணிகளுக்கு அபராதம்! – JPJ JOHOR!

- Sangeetha K Loganathan
- 03 Jul, 2025
ஜூலை 3,
பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் SEAT BELT அணிந்திருக்க வேண்டுமென்பது ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிக்கும் நிலையில் நேற்று ஜொகூர் மாநிலச் சாலைப் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட சோதனையில் SEAT BELT அணிந்திருக்காத 109 பயணிகளுக்குத் தலா RM 300 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நேற்றிரவு ஜொகூர் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர் மாநில JPJ இயக்குநர் Azmil Zainal Adnan தெரிவித்தார்.
சுற்றுலா, பயணிகள் பேருந்து என மொத்தம் 675 பேருந்துகளைச் சோதனையிட்டதாகவும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் கட்டாயம் SEAT BELT அணிந்திருக்க வேண்டும் எனும்படியான எச்சரிக்கை பதாகைகள் இருப்பதை JPJ அதிகாரிகள் உறுதி செய்ததாகவும் ஜொகூர் மாநில JPJ இயக்குநர் Azmil Zainal Adnan தெரிவித்தார். இச்சோதனையின் மூலமாகப் பெரும்பாலன பயணிகள் கட்டாயம் SEAT BELT அணிந்திருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் பயணிப்பதாகவும் அவர்களில் 109 பயணிகளுக்குத் தலா RM 300 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநில JPJ இயக்குநர் Azmil Zainal Adnan தெரிவித்தார்.
JPJ Johor mengeluarkan saman kepada 109 penumpang bas yang gagal memakai tali pinggang keledar, masing-masing didenda RM300. Pemeriksaan melibatkan 675 bas di lebuh raya bertujuan meningkatkan kesedaran pematuhan peraturan baharu yang diwajibkan mulai 1 Julai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *