தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி!

- Sangeetha K Loganathan
- 01 Jul, 2025
ஜூலை 1,
நேற்றிரவு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 வயது மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார். இரவு 8.27 மணிக்குக் கோத்தா கினாபாலுவில் உள்ள Kampung Mansiang குடியிருப்புவாசிகளிடம் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 20 தீயணைப்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இரவு 9.02 மணிக்குப் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்த முதியவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர் 72 வயது Ng Su Yen எனும் மூதாட்டி என அடையாளம் காணப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டில் அவர் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச்சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இரவு 11.30 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Seorang wanita warga emas berusia 72 tahun ditemui rentung selepas rumah dua tingkatnya di Kampung Mansiang, Kota Kinabalu terbakar malam tadi. Mangsa, Ng Su Yen, tinggal seorang diri. Punca kebakaran masih disiasat oleh pasukan forensik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *