மலேசியாவில் செவிலியர்கள் பற்றாக்குறை! சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கும்! – அமைச்சர் நம்பிக்கை!

- Sangeetha K Loganathan
- 29 Jun, 2025
ஜூன் 29,
தற்போது மலேசியாவில் சுகாதார மையங்களில் போதுமான சுகாதார செவிலியர்கள் இல்லை என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். இந்த பற்றாக்குறையால் பல்வேறு சுகாதார மையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விரைந்து சுகாதார அமைச்சு செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமென Datuk Seri Dr Dzulkefly Ahmad நம்பிக்கை அளித்தார். இதன் தொடக்கமாக முந்தை காலங்களில் கைவிடப்பட்ட பயிற்சி பெற்ற செவிலியர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
2020 ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையில் அரசாங்கச் சுகாதாரப் பணியாளர்களில் 6,919 சுகாதார ஊழியர்கள் ராஜினாமா செய்து தனியார் சுகாதார மையங்களில் வேலைக்குச் சேர்ந்ததை Datuk Seri Dr Dzulkefly Ahmad நினைவூட்டினார். அவர்களில் 1,856 பேர் மருத்துவர் தகுதி பெற்றவர்கள் என்றும் 2,141 பேர் செவிலியர்கள் என்றும் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். ஆண்டுக்கு 1,000 செவிலியர்கள் மட்டுமே பயிற்சி பெறுவதால் புதிய செவிலியர்களைப் பணிக்கு அமர்த்துவதில் சிக்கல்களை மேற்கொள்வதாக Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
Malaysia kini berdepan kekurangan jururawat, menjejaskan operasi pusat kesihatan. Kementerian Kesihatan berusaha mengenal pasti jururawat terlatih yang berhenti sebelum ini untuk diambil semula bekerja, bagi mengatasi masalah kekurangan tenaga kerja kesihatan di hospital awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *