நேரெதிரே மோதிய வாகனங்கள்! குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 01 Jul, 2025
ஜூலை 1,
கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்களும் நேரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வாகனத்திலிருந்து மேலும் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று காலை 7 மணியளவில் பாகான் செராய் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Sayani Saidon தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த Nissan Almera வாகனம் எதிரில் வந்துக் கொண்டிருந்த Proton Persona வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Nissan Almera வாகனமோட்டியான 40 வயது பெண்ணும் 12 வயது சிறுமியும் 2 வயது குழந்தையும் படுகாயம் அடைந்திருப்பதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Sayani Saidon தெரிவித்தார். Proton Persona வாகனமோட்டி காயங்களின்றி தப்பிய நிலையில் Proton Persona வாகனத்திலிருந்த 7 வயது சிறுமி சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Sayani Saidon தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் Parit Buntar மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பேராக் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Sayani Saidon உறுதிப்படுத்தினார்.
Dua kenderaan hilang kawalan lalu bertembung secara berhadapan di Bagan Serai, mengakibatkan tiga mangsa termasuk dua kanak-kanak cedera parah. Dua lagi mangsa terselamat tanpa kecederaan serius dan semua mangsa sedang dirawat di Hospital Parit Buntar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *