மின்கம்பத்தை மோதிய கார்! இளைஞர் பலி!

top-news

ஜூலை 4,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 7 மணிக்குப் பாசிர் பூத்தேவில் உள்ள Cherang Ruku இடைநிலைப்பள்ளி எதிரில் இவ்விபத்து நிகழ்ந்ததாக PASIR PUTEH மாவட்டக் காவல் ஆணையர் Zaizul Rizal Zakaria தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர் 25 வயது உள்ளூர் இளைஞர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாகவும் PASIR PUTEH மாவட்டக் காவல் ஆணையர் Zaizul Rizal Zakaria உறுதிப்படுத்தினார்.

சம்மந்தப்பட்ட வாகனம் தெலுகா பாப்பானிலிருந்து செராங் ருக்கு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்திருப்பதாகவும் சாலையில் நீர் தேக்கம் காணப்பட்டிருப்பதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின் கம்பத்தை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக PASIR PUTEH மாவட்டக் காவல் ஆணையர் Zaizul Rizal Zakaria தெரிவித்தார். விபத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறையின் விசாரணைக்கு உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார்.


Seorang pemuda tempatan berusia 25 tahun maut di tempat kejadian selepas kereta dipandunya hilang kawalan lalu merempuh tiang elektrik di hadapan sekolah Cherang Ruku, Pasir Puteh. Jalan licin dan takungan air dipercayai punca nahas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *