வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைக் கொளுத்திய கும்பல்! – BANDAR SAUJANA PUTRA!

top-news

ஜூலை 2,


சிலாங்கூர் BANDAR SAUJANA PUTRA குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனங்களைக் கும்பல் ஒன்று தீயிட்டுக் கொளுத்தியதாக நம்பப்படுகிறது. காலை 6.45 மணியளவில் குடியிருப்புவாசிகளிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு அதிகாரிகளுடன் விரைந்ததாக Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். கோலா லங்காட்டில் உள்ள சொகுசு குடியிருப்புப் பகுதியான Bandar Tropicana Aman, Bandar Saujana Putraவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 5 சொகுசு வாகனங்கள் முழுமையாகத் தீயில் கருகியதாக Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்

சம்பம் நிகழ்ந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரத்தில் கும்பல் ஒன்று வாகனங்களைக் கொளுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சந்தேகத்திற்குரிய நால்வரைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். தீயில் கருக்கிய 5 சொகுசு வாகனங்களின் மதிப்பு RM 16 லட்சம் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் வீட்டின் முன் பக்கம் சேதமடைந்திருப்பதாகவும் Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இது திட்டமிட்ட தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் இச்சம்பவத்தில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.


Lima kereta mewah yang diletakkan di hadapan rumah di Bandar Saujana Putra dibakar kumpulan penjenayah ketika pemilik tiada di rumah. Polis sahkan kerugian RM1.6 juta, mengenal pasti empat suspek dan menyiasat sebagai serangan terancang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *