பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்கல்வி அமைச்சு வலியுறுத்து!

top-news

ஜூன் 26,


சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து வகை உயர்கல்விக்கூடங்களிலும் பாதுகாப்பை உறுதிச் செய்யும்படி உயர்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகங்களின் பொறுப்பு என உயர்கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது. 

கொலை செய்யப்பட்டிருக்கும் மாணவி குறித்தான எந்தவோர் ஊகங்களையும் எந்த தரப்பினரும் பரப்புரை செய்ய வேண்டாம் என்றும் இது தொடர்பான எந்தவோர் ஆதாரங்களைக் கொண்டிருந்தாலும் முறையாகக் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கும்படியும் உயர்கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது. நாட்டிலுள்ள அனைத்து வகை உயர்கல்விக் கூடங்களும் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் புறப்பாட நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் மேற்கொள்ளும்படியும் உயர்கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.


Berikutan kes bunuh pelajar Universiti Cyberjaya, Kementerian Pengajian Tinggi menggesa semua institusi pengajian tinggi meningkatkan keselamatan kampus. KPT juga menasihatkan orang ramai agar tidak menyebar spekulasi dan menyerahkan maklumat sah kepada pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *