வெளிரி விலங்குகள் எனும் அல்பினோ அனிமல்ஸ்!

top-news
FREE WEBSITE AD

தனக்கே உரிய நிறங்களில் நாம் விலங்குகளை தினம் தினம் பார்த்துக் கொண்டிருப்போம். அல்லது ஏதாவது  மிருக கண்காட்சி சாலைகளில் பார்த்திருப்போம். ஆனால் அல்பினோ எனப்படும் தன் இயற்கையான நிறத்தை இழந்து தன் சக விலங்குகளிடமிருந்து சற்றே மாறுபட்டு காணப்படும் அரிதான விலங்குகள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழில் இந்த வகையான விலங்குகளை வெளிரி விலங்குகள் என்றும் ஆங்கிலத்தில் அல்பினோ அனிமல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.





குறைபாடுடைய நிறமிகள் தோளில் உருவாக ஆரம்பித்து அதனால் ஏற்படும் ஒரு மரபணு குறைப்பாட்டு நோய் தான் அல்பினோ. தோளில் உள்ள மெலானின் நிறமிகள் உருவாவதற்கு தேவையான டைரோசினேஸ் செயல்கள் நடைபெறாமல் இருப்பதே அல்பினோ உயிரிகள் இந்த மண்ணில் பிறப்பதற்கு முக்கியமான காரணம். இதில்  மனிதர்களும் அடங்குவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களையும் நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம்.





ஆனால் அல்பினோ விலங்குகளை நாம் அவ்வளவாக பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை.அப்படிப்பட்ட விலங்குகள் தன் இன கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  அல்பினோ மரபணு குறைபாடுகள் உள்ள மனிதனோ இல்லை விலங்குகளோ பார்ப்பதற்கு அழகான தோற்றமாக தெரிந்தாலும் அந்த உயிர்களுக்கும் அல்பினோ குறைப்பாட்டு நோயில் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.

பெரும்பாலும் ஆல்பினோ உயிரினங்களின் தலைமுடிகள் மட்டுமல்லாது உடலின் மொத்த முடிகளும் வெண்மை நிறத்திலும், கண்கள் மற்றும் உதடுகள் பிங்க் நிறத்திலும் காணப்படும்.ஆல்பினோ உயிரினங்கள் இன்று மட்டுமல்ல மனிதன் மற்றும் விலங்குகளின் நிலையான வண்ணமும் நெருக்கடி இல்லாத சூழல்கள் மாறும் வரை ஆல்பினோ உயிரினங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு என்றுமே அதிசயம் தான்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *