நஜீப்பிடம் லிம் கிட் சியாங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! – பாரிசான் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 02 Jul, 2025
ஜூலை 2,
துணை வழக்கறிஞர் Kevin Morais கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak சம்மந்தப்பட்டிருப்பதாக டி.ஏ.பி கட்சியின் முன்னாள் தலைவர் Lim Kit Siang தவறாகக் கருத்துகளைப் பரப்புரை செய்ததற்காக நஜீப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாரிசான் வலியுறுத்தியது. துணை வழக்கறிஞர் Kevin Morais கொலை வழக்கில் லிம் கிட் சியாங் தெரிவித்த கருத்தே நஜீப்பிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் லிம் கிட் சியாங் நஜீப்பின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார் என்பதால் லிம் கிட் சியாங் நஜீப்பிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாரிசான் முன்னாள் தகவல் தொடர்பாளர் Datuk Eric See To வலியுறுத்தினார்.
Kevin Morais கொலை வழக்கை உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், கூட்டாட்சி நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் எதிலுமே நஜீப் சம்மந்தப்பட்டிருப்பதற்கான எந்தவோர் ஆதாரமும் இல்லை. அப்படியிருக்க லிம் கிட் சியாங் வெற்று அரசியலுக்காக நஜீப்பின் மீது அவதூறு பரப்பியதற்கு லிம் கிட் சியாங் நஜீப்பிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென Datuk Eric See To தெரிவித்தார். லிம் கிட் சியாங்கின் இந்த பொய் பரப்புரையால் மக்கள் நஜீப்பிற்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்ததாகவும் இதனால் நஜீப்பின் தேர்தல் தோல்விக்கும் பாரிசானின் வீழ்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
Barisan Nasional menegaskan Lim Kit Siang harus memohon maaf secara terbuka kepada Datuk Seri Najib Razak kerana didakwa membuat tuduhan palsu mengaitkan Najib dengan kes pembunuhan Kevin Morais tanpa bukti kukuh, yang mencetuskan persepsi negatif terhadap bekas Perdana Menteri itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *