விதைகளை பாதுகாக்கும் அதிசய இடம்தான் "Global Seed Vault"

top-news
FREE WEBSITE AD

ஒரு மலையை குடைந்து 394 அடிக்கு சுரங்கம் அமைத்து -3 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் உலகில் எப்படிப்பட்ட பேராபத்து வந்தாலும், ஏன் நிலநடுக்கமே வந்தாலும் ஒரு இடத்தில் எவ்வித ஆபத்துக்கள் ஏற்படாதவாறு   இனி வரக்கூடிய காலகட்டங்களில் வாழும் மக்களுக்காக உலக நாடுகளின் அனைத்து விதமான செடி மற்றும் மரத்தின் விதைகளை பாதுகாக்க நார்வே நாட்டில் எப்பொழுதும் குளிருடன் காணப்படும் மலைப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இடம் தான் Global Seed Vault . அப்படி என்ன இந்த இடத்தின் சிறப்பம்சம்.

சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வரும் விதைகள் உள்ள அறைகள்,  மைனஸ் 3 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக அதாவது மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் அளவில் அமைந்துள்ளது. ஒரு செடிக்கு ஒரு விதை என்று இல்லாமல் ஒரு செடிக்கு 500 விதைகள் என்று பத்திரமாக காற்று உள்ளே செல்லாதவாறு பைகளில் அடைத்து அவரவர் நாட்டு கொடியுடனும், பெயருடனும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது போன்று 12 லட்சத்திற்கும் அதிகமான விதைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 45 லட்சம் செடிகளின் 250 கோடி விதைகளை  Global Seed Vault ல் பாதுகாக்க முடியும் என கூறுகின்றனர்.

இது போன்ற சீட் பேங்க்  அவரவர் நாடுகளில் உருவாக்கப்பட்டு, விதைகள் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் நார்வே நாட்டில் உள்ள Global Seed Vault ல் வைக்க காரணம் உண்டு. போர் மற்றும் இயற்கை சீற்றங்கள் பாதிக்காத ஒரு இடமாக இந்த இடம் அமைந்துள்ளது. வடகொரியா போன்ற  நாடுகள் கூட தங்கள் நாட்டின் விதைகளை பத்திரமாக இங்கு கொடுத்து பாதுகாத்து வைத்துள்ளது. வடகொரியாவில் தங்கள் நாட்டு விதைகளை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றால்  ஜீரோ டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவான செல்சியஸில் இருக்க வேண்டும். இது போன்ற இடங்கள் வடகொரியாவில் கிடையாது. அங்கு மட்டும் அல்ல மற்ற நாடுகளிலும் கிடையாது. போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் இடங்கள் அழிந்து விடலாம். அதனால்தான் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் ஆர்க்டிக் துருவத்திற்கு அருகில் உள்ள பகுதியில்  Global Seed Vault உருவாக்கியிருக்கிறார்கள்.

2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  Global Seed Vault ல் ஒருமுறை சிரியா நாட்டில் இருந்து கொடுக்கப்பட்ட விதைகளை சிரியா நாட்டு அரசு 2015 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றுக் கொண்டது. ஏனென்றால் அந்த நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போர்தான்.  அவர்கள் விதைகளை பாதுகாத்து வந்த சீட் பேங்க் சேதமடைந்ததன் காரணமாக Global Seed Vault வைத்து பாதுகாக்கப்பட்ட விதைகள் சிரியா நாட்டிற்கு உதவியாக இருந்தது. மீண்டும் இரண்டு வருடம் கழித்து சிரியா தன் நாட்டு விதைகளை Global Seed Vault கொடுத்துள்ளது.

அதேபோல் ரஷ்யாவில் உள்ள பவ்லோஸ்க் எக்ஸ்பிரிமெண்டல் ஸ்டேஷன் என்ற சீட் பேங்க் சில காரணங்களால் தடை விதிக்கப்பட்டு மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின் சுமூக தீர்வுடன் மூடாமல் தடையில் இருந்து தப்பித்தது. இதுபோன்ற பல பிரச்சினை காரணமாக பல நாட்டு செடிகளின் விதைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜெனிடிக் டைவர்சிட்டி(Genetic Diversity) என்ற அடிப்படையில் இங்கு விதைகள் சேமிக்கப்பட்டு வருகிறது. அதாவது உதாரணத்திற்கு தக்காளி விதைகளை எடுத்துக் கொண்டால் ஒரே இனத்தைச் சார்ந்த தக்காளி விதைகளை பாதுகாக்காமல், உலகத்தில் எத்தனை வகையான தக்காளி இனத்தின் விதைகள் உள்ளனவோ அந்த அடிப்படையில் Global Seed Vault முறையில் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு பெயர் தான் ஜெனிடிக் டைவர்சிட்டி (Genetic Diversity) .  அதாவது மரபணு வேறுபாடுடன் கூடிய பல இன வகையான செடிகளின் விதைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

எது எப்படியோ இனிவரும் காலங்களில் கடுங்குளிர், அதிகமான வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் நம் பூமியின் நிலப்பரப்பு மாற்றம் காணும் பொழுது அஅப்பொழுது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றார்போல பயிர்களின் விதைகளை நட்டு உயிர்களை காப்பது என்பதற்காக கூட Global Seed Vault ன் வழி பாதுகாக்கப்படும் முறைகள் என்றைக்குமே நல்ல ஒரு பாராட்டுக்குரிய விஷயம் தான். பூமியில் மனித இனம் அழிந்து ஏலியன் வாழும் காலம் வந்தாலும் இல்லை ரோபோக்களின் காலமான AI.. AGI... ASI.. போன்ற கால கட்டத்தில் கூட இந்த Global seed vault ன் வழி பாதுகாக்கப்பட்டு வரும் விதைகள்  வழி புது உலகை படைக்கலாம்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *