LOVE SCAM மோசடியில் RM300,000 இழந்த பெண்!

top-news

ஜூன் 28,


சமூகவலைத்தலத்தில் அறிமுகமான வெளிநாட்டு ஆடவரை நம்பி பினாங்கைச் சேர்ந்த தொழில்சாலை மேலாளரான 45 வயது பெண் RM300,000 பணத்தை இழந்துள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை துணைத் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார். கடந்த 2024 நவம்பர் முதல் அமேரிக்காவைச் சேர்ந்த ஆடவர் என நம்பப்படும் ஒருவருடன் பழகி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

அமேரிக்காவில் வணிகம் செய்து வருவதாகத் தெரிவித்த Richard Ming Li எனும் ஆடவர் தனது வணிகத்திற்கான வருமானம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதால் போதிய தொகை வழங்கினால் இரட்டிப்பாக மீண்டும் தருவதாக நம்பிக்கை அளித்ததும் கடந்த டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரையில் 5 உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு 16 பரிவர்த்தனைகள் மூலமாக RM300,000 வழங்கியதாகவும் தொடர்ந்து சந்திப்பதற்காக முயற்சிக்கும் போது Richard Ming Li எனும் ஆடவர் எனும் ஆடவர் மறுத்து வந்ததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகப் பாதிக்கப்பட்ட 45 வயது பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Seorang pengurus kilang wanita berusia 45 tahun di Pulau Pinang kerugian RM300,000 selepas diperdaya sindiket Love Scam melalui kenalan media sosial yang menyamar sebagai ahli perniagaan warga Amerika. Mangsa membuat 16 transaksi sebelum menyedari ditipu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *