சபா சட்டமன்றத் தேர்தலினால் அம்னோ பொதுப் பேரவை நவம்பருக்கு ஒத்தி வைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2-

சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவதற்காக, தனது பொதுப் பேரவையை நவம்பர் 26 முதல் 29ஆம் தேதி வரை நடத்துவதென்று அம்னோ முடிவு செய்திருக்கிறது.

பொதுப் பேரவையை வரும் ஆகஸ்ட் மாதம் 20 முதல் 23ஆம் தேதி வரை நடத்துவதென்று இதற்கு முன்னர் அது முடிவு செய்திருந்தது. அதற்கு ஏற்ப தற்போது அதன் தொகுதிக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அது இம்மாதம் 27ஆம் தேதி வரை நீடிக்கும்.

இந்நிலையில், சபா மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் நவம்பர் 11ஆம் தேதி முடிவடைகிறது.அதற்கு 60 நாட்களுக்கு முன்னரே சபா சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதென்று அம்னோ ஆதிக்கத்திலான தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் தேர்தல் ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றை கண்டிருக்கின்றன. இந்த உடன்பாட்டில் பக்காத்தான் ஹராப்பானுடன் காபுங்ஙான் ரக்யாட் சபாவும் (ஜி.ஆர்எஸ்) கூட்டுச் சேர்ந்திருக்கிறது.

அதோடு, ஜிஆர்எஸ்சுடன் கூட்டணியை அமைப்பதற்கான கதவை தேசிய முன்னணி
முழுமையாக மூடிவிடாத நிலையில், மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்தான் ஜிஆர்எஸ்சுடன் கூட்டுச் சேருவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று, மாநில தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் அண்மையில் தீர்க்கமாகக் கூறியிருந்தார்.

சபா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் ஜிஆர்எஸ் ஆகிய மூன்று கூட்டணிகளும் ஒன்று சேரவேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில், மாநில சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவதில், உள்ளூர் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடுகளைக் காணவிருப்பதுடன், தற்போது பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி தேர்தல் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒன்றை செய்து கொண்டிருப்பதாக, அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் கடந்த சனிக்கிழமை ஜொகூரில் கூறியிருந்தார்.

UMNO menunda perhimpunan agungnya ke 26–29 November bagi persiapan PRN Sabah. PRN dijangka sebelum 11 November. Kerjasama pilihan raya melibatkan Barisan Nasional, Pakatan Harapan, dan GRS sedang dirunding, dengan keputusan akhir selepas pilihan raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *