வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிள்! ஆடவர் பலி!

top-news

ஜூலை 2,


கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 42 வயதான மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இன்று காலை 10.20 மணிக்கு கோலா திரங்கானுவிலிருந்து கோத்தா பாரு செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக SETIU மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Zain Mat Dris தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார். 


44 வயதான PROTON SAGA வாகனமோட்டி வாகனதைத் திடீரென திருப்பியதால் பின்னாடிச் வந்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது இந்த விபத்தில் 44 வயதான PROTON SAGA வாகனமோட்டியு படுகாயம் அடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் SETIU மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Zain Mat Dris தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த 42 வயதான மோட்டார் சைக்கிளோட்டி Wan Hasbullah Wan Abdul Halim எனும் உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் SETIU மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Zain Mat Dris தெரிவித்தார்.


Seorang penunggang motosikal berusia 42 tahun maut di lokasi selepas motosikalnya merempuh sebuah kereta Proton Saga yang membelok secara tiba-tiba di Setiu. Pemandu kereta berusia 44 tahun cedera dan sedang dirawat. Kes disiasat lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *