இந்தோனேசியாவில் உள்ள தன்னாலாட் எனும் மர்ம இந்து கோவில்!

top-news
FREE WEBSITE AD

நடுக்கடலுக்குள் உள்ள பாறையில் கட்டப்பட்டு பாம்புகளால் பாதுகாக்கப்படும் மர்ம கோயிலை பற்றி சிந்தனை பூங்காவில் பார்க்கலாம்.இந்தியாவில் பல்வேறு  இந்து கோயில் இருக்கிறது இருப்பது பெரிய விசயம் இல்லை. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இந்தோனேசியாவில் உள்ள இந்து கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.




இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் கோயில் தான் தன்னாலாட்(Tanah Lot). இதனை கடல் கோயில் என்றும் அழைக்கிறார்கள்.

அதாவது, கடற்கரை ஓரமாக கட்டப்பட்ட இந்த கோயிலானது மண் அரிப்பு ஏற்பட்டதால் கடலுக்கு நடுவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலை பற்றிய மர்மங்களும் ஏராளம் உள்ளன.

தன்னாலாட் (Tanah Lot) என்பதற்கு இந்தோனேசிய மொழியில் அர்த்தம் என்னவென்றால் கடலின் நிலம் ஆகும். இந்த கோயிலானது பாலி பகுதியில் கடலில் கட்டப்பட்ட 7 கோயில்களில் ஒன்றாகும்.இந்த கோயில்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலை பார்த்தால் தெரியும்படி கட்டப்பட்டுள்ளது.

16 -ம் நூற்றாண்டின் டாங்யாங் நிரார்த்தா என்பவரால் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். இவர் தென் கடற்கரையில் மேற்கொண்ட தனது பயணத்தின்போது தீவு பாறையில் அமைந்துள்ள அழகிய அமைப்பைக் கண்டுள்ளார்.பின்னர், அங்கு ஓய்வெடுக்க முடிவெடுத்து இரவை அங்கேயே கழித்தார். இதையடுத்து, அங்குள்ள மீனவர்களிடம் பாறையில் ஒரு கோயில் கட்டும்படி கூறினார். ஏன் என்றால் இந்த இடமானது பாலினிய கடல் கடவுள்களை வணங்குவதற்கான புனித இடமாக அவர் உணர்ந்தார்.

இந்த கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேதமில்லாமல் இருந்த நிலையில், 1980 -ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயலின் காரணமாக கோயிலின் பாறை முகம் நொறுங்கத் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றியுள்ள பகுதியும், கோயிலின் உட்பகுதியும் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்தது. இதனால், கோயிலில் உள்ள சில பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இதன்பின்னர், ஜப்பான் அரசு வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் மற்றும் பாலி சுற்றி அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தோனேசிய அரசிற்கு கடனாக நிதியுதவி வழங்கியது. பின்னர், கோயில்களை சீரமைத்து பாதுகாப்பான இடமாக அறிவிக்கப்பட்டது.

இந்த கோயிலின் முக்கிய அம்சம் என்னவென்றால், கோயிலின் பாதுகாப்பிற்காகவும், பல தீய மனிதர்கள் மற்றும் தீய ஆவிகளிடமிருந்து பாதுகாக்க கோயிலுக்கு அடியில் அதிக விஷத்தன்மை வாய்ந்த கடல் பாம்புகள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.இந்த பாம்புகள் தான் கோயிலை பாதுகாத்து வருவதாகும் சொல்லப்படுகிறது. இந்த பாம்பானது தீவை நிறுவிய நிரார்த்தாவின் செலெண்டாங் (ஒரு வகை சாஷ்) -லிருந்து உருவாக்கப்பட்டதாகும்.




இந்த பாம்புகள் உண்மையாகவே கடலுக்கடியில் இருக்கிறதா என்று தகவல் தெரியவில்லை. கட்டுக்கதையாக உள்ளதா என்றும் தெரியவில்லை. இந்து கோயில்களில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருந்தால் பாம்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.அந்த வகையில் இந்த கோயிலுக்குள் விலை மதிப்புள்ளவை இருக்கிறதா என்றும் கேள்வி எழுகிறது. கடலுக்கு நடுவில் இருக்கும் இந்த கோயிலுக்கு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகின்றனர்.

இந்தோனேசியாவின் வருமானம் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் நிலையில் இந்த கோயிலும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.இந்த கோயிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பாலினிய சந்தை வடிவில் அமைந்துள்ள கடைகளைக் கடந்து நடந்து செல்ல வேண்டும்.அவை கடலுக்கு செல்லும் பாதையின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகின்றன. நிலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள் உள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *