சமூக ஊடகம் வாயிலாக போலி ஓட்டுநர் உரிமம்!

top-news

சமூக ஊடகம் வாயிலாக ஓட்டுநர் உரிமை அட்டை வாங்கிய வியட்நாமிய ஆடவரைச் சாலை போக்குவரத்துத் துறை கைது செய்துள்ளது. 

 24 வயதான அந்த நபர் சமூக ஊடகம் வாயிலாக 2,000 வெள்ளிக்கு ஓட்டுநர் உரிமத்தை வாங்கியதாக நம்பப்படுவதாக கெடா மாநிலச் சாலை போக்குவரத்துத் துறை இயக்குநர் ஷாருல் அசார் மாட் டாலி தெரிவித்தார்.

 அந்நபர் புக்கிட் காயு ஹீத்தாமில் எல்லையில் நாட்டிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிடைக்கப்பெற்ற

ஓட்டுனர் உரிமம் ரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டு அது போலியானது என்று கண்டறியப்பட்டதாக அவர்  கூறினார்.

 இது தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,

சம்பந்தப்பட்ட சமூக ஊடகம் வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல உள்ளூர் பொதுமக்களுக்கும் ஓட்டுநர் உரிமத்தை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இதன் மூலம் வெளிநாட்டினர் ஓட்டுநர் சோதனை மற்றும் பயிற்சியின்றி எளிதாக உரிமம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *