மலாய் மொழியில் புலமை இல்லாவிட்டால், குடியுரிமை இல்லையா?
- Tamil Malar (Reporter)
- 24 Apr, 2024
மலாய்
மொழியில் புலமை இல்லாததால் குடிநுழைவு அதிகாரி விண்ணப்பங்களை நிராகரிப்பதாக
வெளிவந்த செய்தியை பினாங்கு மாநிலக் குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ
மறுத்துள்ளார்.
குடிநுழைவு அதிகாரிகளைப் பொருத்தமட்டில், விண்ணப்பத்தை அவர்கள் அங்கீகரிக்கும் முன் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சோதனைகளை மேற்கொள்வார்கள்.
இருப்பினும், இந்த மதிப்பாய்வு தொழில்
ரீதியாகவும் விவேகமாகவும் செய்யப்பட வேண்டும். இருப்பினும் குடிநுழைவுத் துறையால்
நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் படி பொதுமக்களை நடத்துமாறு
அனைத்து அதிகாரிகளுக்கும் எப்போதும் நினைவூட்டப்படுகிறது என்று ஓர் அறிக்கையில் அவர்தெரிவித்தார்.
மலாய்
மொழி சரளமாகத் தெரியாததால், தனது
தாயின் கடப்பிதழை புதுப்பிக்க முடியாமல் ஒரு நபர் ஏமாற்றமடைந்ததாக வெளியான
செய்திகள் குறித்து ரஸ்லின் இவ்வாறு கருத்துரைத்தார்.
மலாய் மொழியில் தேர்ச்சி பெறத் தவறியதால் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எந்தவொரு விண்ணப்பத்தையும்
நிராகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *