பேருந்தை ஓட்டிக்கொண்டே வீடியோ கால் செய்து பேசியவர்கள் கைது!

top-news


டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த மூன்று விரைவு பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் போல் வேடமிட்ட சாலை போக்குவரத்து
அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சாலை தடுப்பு சோதனையின் போது சம்பந்தப்பட்ட மூன்று பேருந்து ஓட்டுநர்களும் பிடிபட்டனர்.

கடந்த ஏப்ரல் 1 மற்றும் 18ஆம் தேதிக்கு இடையில் இங்குள்ள சஹாப் பெர்டானா பஸ் முனையத்திற்கும் ஈப்போ மற்றும் கோலாலம்பூருக்கும் இடையே பயணச் சேவையை மேற்கொண்டிருந்த போது 52 முதல் 54 வயது வரையிலான அம்மூவரும் இக்குற்றத்தைப் புரிந்தது கண்டுபிடிக்கப்பட்டந்தாக  கெடா மாநில சாலை போக்குவரத்து இலாகாவின்
துணை இயக்குநர் ஷஹாருள் அஸார் மாட் டாலி கூறினார்.

இச்செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என்பதால் அந்த ஓட்டுநர்களுக்கு எதிராக குற்றப்பதிவு வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இந்த விவகாரத்தை தாங்கள் பொது தரை போக்குவரத்து நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *