30 குறுநூல்கள் வெளியீடு: ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் சாதனை!
- Tamil Malar (Reporter)
- 25 Apr, 2024
(தி. கதிர்வேலன்)
மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத் துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறையைச் சார்ந்த பதினைந்து தமிழ் ஆய்வியல் மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 30 குறுநூல்கள் வெற்றிகரமாக வெளியீடு கண்டன. நூல் வெளியீட்டைக் கல்விக்கழக இயக்குநர் சஹாட் பின் அபாஸ் வெற்றிகரமாக நிகழ்த்தினார்.
நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் தி சாமிநாதன் கோவிந்தசாமியும், நூல் வெளியீட்டுக்கான காரணகர்த்தாவாக விளங்கும் முனைவர் மு.மணியரசன், தமிழ்த்துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்
நூல் எழுதிய மாணவர்கள் தத்தம் நூல்களை. காட்சிப்படுத்தியது மிகவும் சிறப்பாக இருந்தது.. வருகைபுரிந்த வருகை புரிந்த மாணவர்களுக்கும் விரிவுரைஞர்களுக்கும் குறுநூல் எழுதிய எழுத்தாளர்கள் அவர்கள் புனைந்த தங்கள் சிறுவர் கதைகளையும் நாடகங்களையும் விளக்கிக் கூறினர். அவர்களுக்கு இனிப்பு மிட்டாய்களுடன் தாங்கள் செய்த பக்கவிளம்பியை (bookmark) நினைவுச்சின்னமாக அளித்தது வருகையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது.
இக்குறுநூல்கள் இரண்டு வகையாக, பதினைந்து சிறுவர் கதைகளாகவும் பதினைந்து சிறுவர் நாடகங்களாகவும் அச்சிடப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கிய விரிவுரையாளர் முனைவர் மு.மணியரசன் அவர்களால் இப்பருவத்தில் மாணவர்களுக்குச் சிறுவர் கதைகள், நாடகங்கள் எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்கள் எழுதிய கதைகள் திருத்தங்கள் செய்யப்பட்டன. மூன்று மாதப் பயிற்சிக்குப் பின்னரே கதைகளும் நாடகங்களும் நூல் வடிவம் கண்டன.
“2003இல் துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் சிறப்புச் சான்றிதழுக்கான ஆசிரியர் பயிற்சி குழுவின் கைவண்ணத்தால் மலேசியாவில் முதன்முறையாக “சிறுவர் கதைகள் 1” எனும் புத்தகம் வெளியீடு கண்டது என முனைவர் மு.மணியரசன் தெரிவித்தார். தொடர்ந்து 2004 ஆண்டில் “சிறுவர் கதைகள் 2” எனும் புத்தகம் வெளியீடு கண்டது என அவர் மேலும் தெரிவித்தார். அதன் பிறகு மூன்றாவது சிறுவர் கதைகள் 2024ஆம் ஆண்டில் வெளியீடு காணபதாக அவர் மேலும் தெரிவித்தார். “எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். எழுத்துத் துறையில் ஆசிரியர்கள் கைவரப்பெற்றிருப்பது அவசியமானதாகும். நீங்கள் எழுதும் இப்புத்தகங்களை வாசிக்கும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதி காலம் வரை உங்களை மறக்காமல் நினைவு கூர்ந்து வைத்திருப்பார்கள். இது போன்ற அறிவை மாணவர்களுக்கு பரப்புதல் வேண்டும்.” என வளாக இயக்குநர் தமது சிறப்புரையில் வேண்டுகோள் விடுத்தார். முனைவர் மு.மணியரசன் அவர்களின் முயற்சியில் மிகச் சிறப்பான பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது இளைய சமுதாயத்திகுத் தேவையான ஒரு பணி, சிறுவர்கள் இப்புத்தகத்தால் கவரப்படுவார்கள் என திருவாளர் சஹாட் அவர்கள் மேலும் குறிப்பிட்டார். இளம் படைப்பாளர்களை உருவாக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்ட முனைவர் மணியரசன் முனியாண்டி அவர்களையும் பாராட்டினார். படைப்பிலக்கியத்தை வளர்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் தலையாயக் கடமையாகும் என்றும் இளம் படைப்பாளர்கள் நம் துறையில் உருவாவதை நினைத்துப் பெருமையாக உள்ளது என்று தமிழ்த்துறைத்தலைவர் திரு சாமிநாதன் மாணவர்களைப் பாராட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *