AI நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களை MCMC தேடுகிறது!

top-news


 சமூக ஊடக பயனர்களை அவமானப்படுத்தும் வகையில் புகைப்படங்களைத் திருத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தேடி வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil  தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்கவும், ஆன்லைன் பயனர்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.

எம்சிஎம்சி தனிநபர்களைக் கண்காணித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த கவலை அடைவதாகவும்,

இதனால்தான் 13 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் எந்தவொரு சமூக ஊடக பயன்பாட்டையும் பயன்படுத்தக்கூடாது என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சமூக ஊடக தளங்களின் பல பிரதிநிதிகளை தகவல் தொடர்பு அமைச்சு சந்தித்துள்ளதாகவும், ஆன்லைன் பயனர்களின் பாதுகாப்பு குறித்து விரைவில் சில நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கபப்டும் என்றும் Fahmi கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *