தமிழ் அறவாரியத்தின் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு

top-news
FREE WEBSITE AD

மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவை, மலேசியத் தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாட்டில் சிலாங்கூர் & கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு கடந்த 11 மே 2024 தமிழ் அறவாரியப் பணிமனையில் நடைபெற்றது

தமிழ் மொழி கற்பித்தல் மற்றும் பயிற்றுவிக்கும் கருவிகளின் பயன்பாடு, குறிப்பாகப் பாடநூல் உள்ளடக்கம் பற்றிய தரவுகளைப் பெறுவது இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். மலேசியத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு ஸ்.ஸ்.பாண்டியன் இக்கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் சிலாங்கூர் & கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் கல்வியும் கலைத்திட்டமும், ஆசிரியர் எதிர்நோக்கும் இடர்கள், மாணவர்/பெற்றோர் எதிர்ப்பார்ப்புகள், பாடநூலும் கற்றல் கற்பித்தல் உத்தியும், மாணவர் தன்முனைப்பு, சில ஆலோசனைகள் ஆகியவை குறித்து பேசப்பட்டன. மேலும், இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் குமரன் வேலு, பத்துமலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி, அய்நர் திருமதி தேவி ஆகியோர் மூன்று தலைப்புகளில் தங்களின் அங்கத்தை வழிநடத்தினர். 

தலைமையாசிரியர் பார்வையில் என்ற தலைப்பில் மலேசியத் தலைமையாசிரியர் மன்றப் பொருளாளரும் பத்துமலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான திருமதி சரஸ்வதி பேசினார். இவ்வங்கத்தில், தலைமையாசிரியர் பார்வையில் போதனை நேரம், தமிழ்க்கல்வி கற்பதற்கு மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் போன்ற பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

அய்நர் பார்வையில் என்ற தலைப்பில் அய்நர் கடமைகள் போன்றவற்றை குறித்து பேசினார். 
இதனையடுத்து, ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்கள் எனும் தலைப்பில் வருகைப்புரிந்த ஆசிரியர்கள் கலந்துரையாடல் ஒன்றை செய்தனர். ஆசிரியர்கள் ஐந்து குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு இடர்கள் குறித்து விளக்கினர்.
 இக்கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என் வருகையளித்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

 வருகையளித்த ஆசிரியர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *