சட்ட விரோதமாய் பொருள்களைக் கொண்டு சென்ற கேப்டன் கைது!
- Tamil Malar (Reporter)
- 17 Apr, 2024
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதற்காக படகின் கேப்டன் தவாவ் கடல் பகுதியில் கைது செய்யப்பட்டார். நேற்று பிற்பகலில் Ops Khas Pagar Laut மற்றும் Ops Tiris நடவடிக்கையை மேற்கொண்ட கடல்சார் அதிகாரிகள் படகை ஆய்வு செய்ததில், 200 கிலோ அரிசி, 10 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள், 204 கிலோ சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, 3 கேலன் பெட்ரோல் மற்றும் மூன்று எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். சம்பந்தப்பட்ட அந்த நபர் அரிசிக்கான எந்த வர்த்தக உரிமத்தையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். மேலும் மதியம் 1.15 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பொருட்களுக்கான சுங்க அறிவிப்பு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (MMEA) Tawau கடல்சார் அமைப்பின் மண்டல இயக்குநர் கேப்டன் ஷாரிசான் ராமன் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *