நெகிரி செம்பிலான், ரந்தாவ், வின்சன் தோட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு தேவி ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயிலில், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

top-news

நெகிரி செம்பிலான், ரந்தாவ், வின்சன் தோட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு தேவி ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயிலில், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியகராஜன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், அந்நிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் வழிபாடுகள் நடப்பதாகவும், தோட்டப்புற கோயில்களில்தான் தமிழில் திருமுறைகளைக் கேட்க முடிவதாகவும் கூறினார். புரியாத மொழியில் வழிபாடு நடக்கும்போது நமது பிள்ளைகளின் கவனம் திசைமாற வாய்ப்பு உள்ளது. அதுவே தமிழ் மொழியில் வழிபாடு என்றால் அவர்களும் சேர்ந்தே உச்சரிப்பார்கள் என்று கூறினார்.

நம் குழந்தைகளுக்கு தேவாரம் மற்றும் திருக்குறள் சொல்லிக் கொடுத்தாலே கட்டோழுங்கில் மிகச்சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள் என்று வலியுறுத்தினார்.

மேலும் ஆலயத்திற்கான நன்கொடையை மேடையிலேயே அறிவித்த அவர், மேற்கொண்டும் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *