அன்வாரின் ஆலோசனை வேண்டாம்! நான் விலகுவது எல்லோருக்கும் நல்லது! - Nik Nazmi

- Sangeetha K Loganathan
- 01 Jul, 2025
ஜூலை 1,
இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்பிலிருந்து நான் விலகுவது எல்லோருக்கும் நல்லது என முன்னாள் அமைச்சர் Nik Nazmi Nik Ahmad இன்று தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தாம் கவலையடையவில்லை என்றும் நான் உறுதியாக எடுத்த முடிவு இது என்றும் Nik Nazmi Nik Ahmad தெரிவித்தார். கட்சியில் பொறுப்பில்லாதவர்கள் அமைச்சராக இருந்தால் தேவையற்ற பல்வேறு சலுகைகளை அனுபவிக்க நேரிடும் என்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் ஆட்சியில் இருப்பது தான் சரி என்றும் Nik Nazmi Nik Ahmad தெரிவித்தார்.
நான் விலகுவதாக அறிவித்ததும் பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான Datuk Seri Anwar Ibrahim எனக்கு கால அவகாசம் வழங்குவதாகவும் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பும் எண்ணம் இருந்தால் எனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கியதை நான் மதிக்கிறேன். ஆனால் இது காலம் கடந்த ஆலோசனையாகவே தாம் கருதுவதாகவும் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினருமான Nik Nazmi Nik Ahmad தெரிவித்தார்.
Nik Nazmi menegaskan keputusannya meletak jawatan Menteri Sumber Asli adalah muktamad walaupun Anwar memberi ruang untuk mempertimbang semula. Katanya, keputusan berundur adalah yang terbaik bagi semua pihak demi menjaga integriti dan tanggungjawab parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *