மறுசுழற்சிப் பொருள்களை வேறுபடுத்தும் வழிமுறை-மாணவர்கள் நடைமுறையில் பின்பற்ற அறிவுரை!

- Muthu Kumar
- 01 Jul, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஜூலை 1-
பினாங்கு மாநிலத்தில் மறுசுழற்சிக்குரிய பொருள்களை பிரித்தெடுக்கும் வழிமுறை தொடர்பில் "மாநகர் மன்றத்துடன் ஒருநாள்" என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, இங்கிருக்கும் தாமான் செரீனா குடியிருப்புப் பகுதியில் அமையப் பெற்றுள்ள மறுசுழற்சி மையத்தில் நிகழ்ந்தபோது, இதில் மாநிலத்தின் ஹன் சியாங் சீனப் பள்ளியைச் சேர்ந்த 36 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் தன்னார்வலர்களாக களமிறங்கி வீசியெறியப்படுகின்ற பொருள்களை பிரித்தெடுக்கும் வழிமுறைகளை, படிப்பினையாகக் கற்று பயனடைந்தனர்.
காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையில் நடந்தேறிய இந்நிகழ்ச்சி ஒரு கல்வி திட்டமாக, மறுசுழற்சிக்கு உகந்த பொருள்களை அடையாளம் சுண்டு வேறுபடுத்தும் கற்றல் முறையில் நடத்தப்பட்ட நிலையில், மாணவர்கள் இதில் மிகுந்த ஈடுபாடுகொண்டு கழிவுப்பிரிப்பை செயல்படுத்தும் சரியான நடைமுறைகளை அறிந்து கொண்ட வேளையில், சேகரிப்பு மையத்திலிருந்து அல்லது வீட்டுப் பகுதியிலிருந்து அவற்றை சேகரித்த பின்னர், உரிய இடங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பிலும் வழி காட்டப்பட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் துடிப்புமிக்க ஆர்வலர்கள் பினாங்கை பசுமையான, மற்றும் நேர்த்தியான விதமாக நிலைத்திருக்கச் செய்வதில், மாநகர சபையின் மறுசுழற்சிப் பணிகள், கூட்டுத் துப்புரவு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தங்களது விடுமுறையை தியாகம் செய்யத் தயாராக இருந்தாலே. மாநிலத்தில் தூய்மைப் புரட்சிக்கு பரவலான பங்களிப்பை நல்க முடியுமென்று. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட வேளையில் இதனை பிறருக்கும் எடுத்துரைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அன்றைய தினம் மாணவர்கள் 107.15 கிலோ எடை கொண்ட மென்மை நெகிழிகள், 109.53 கிலோ எடை கொண்ட உணவு வகை நெகிழிகள், 60,49 எடையிலான புட்டி வகைகள், 273.52 எடையிலான காகித வகைகள், 76.86 கிலோ இரும்பு வகைகள், 49.54 மின்னியல் பொருள்கள், 18.87 அலுமினிய டின்கள், 52.3 எடையிலான கண்ணாடி வகை பொருள்கள், மறுசுழற்சிக்கு ஒவ்வாத 108.97 வகையிலான இதரப் பொருள்கள் ஆகியவற்றை பிரித்தெடுத்தனர்.
கழிவு பிரிப்பு முறைகளைக் கற்றுக் கொள்ள எந்தவொரு தரப்பினரும் மாநகராட்சி தொழில்துறை, பெருநிறுவனம். மற்றும் இதன் கல்வி போதனா நிலையம் ஆகியவற்றின் சேவைகள் தரப்புகளில் பங்கேற்பதை, பினாங்கு மாநகராட்சி எந்நேரமும் வரவேற்பதில் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது ஐயங்களுக்கு பின்வரும் நகராட்சியின் சேவைத் துறை தொடர்பு எண்களில் இணையலாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாட்ஸப் தொடர்புக்கு 0162004082.
Pelajar Hwa Chiang, Pulau Pinang menyertai program “Sehari Bersama Majlis Bandaraya” belajar teknik pengasingan bahan kitar semula. Mereka mengumpul lebih 700kg bahan kitar semula. Program ini memupuk kesedaran alam sekitar dan digalakkan untuk diperluas kepada masyarakat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *