SIDEC சிலாங்கூரின் ஆலோசகராக NURUL IZZAH ANWAR நியமனம்!

top-news

ஜூலை 4,


சிலாங்கூரின் தகவல் தொழில்நுட்பப் பொருளாதாரக் கழகத்தின் (SIDEC) ஆலோசகராகப் பி.கே.ஆர் துணைத் தலைவர் NURUL IZZAH ANWAR நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் இந்த நியமனம் அமலுக்கு வருவதாகச் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. (SIDEC) என்பது சிலாங்கூர் அரசின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கமாக சமூகப்பொருளாதார மேம்பாடும் டிஜிட்டல் அதிகாரத்துவம் சார்ந்து இயங்கும் மாநில அரசின் பிரிவாகும். 

SIDEC கழகத்தால் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாகவும் 400க்கும் மேற்பட்ட பொறியியளாளர்களால் இந்த தகவல் தொழில்நுட்பப் பொருளாதாரக் கழகம் (SIDEC) இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பப் பொருளாதாரக் கழகத்தின் (SIDEC) பங்காளிகளாக அனைத்துலக நிறுவனங்களான ARM, Siemens EDA ஆகிய நிறுவங்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Nurul Izzah Anwar dilantik sebagai Penasihat SIDEC bagi mengukuhkan sektor ekonomi digital Selangor. SIDEC berperanan memajukan transformasi sosioekonomi negeri dengan sokongan lebih 400 jurutera serta kerjasama syarikat antarabangsa seperti ARM dan Siemens EDA.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *