ஹமாஸ் தலைவர்களை சந்தித்தார் அன்வார்!

top-news
FREE WEBSITE AD


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே மற்றும் காலித் மஷால் ஆகியோரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ரஃபா மீதான தாக்குதலை நிறுத்த சர்வதேச அளவில் மலேசியா தனது பங்களிப்பை உறுதி செய்வதாக பிரதமர் கூறினார்.

காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக மனிதாபிமான, மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் மூலம் மலேசியா தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இஸ்ரேலிய படைகளின் குண்டுவீச்சு காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களை இழந்த இஸ்மாயில் ஹனியேவுக்கு தனது இரங்கலையும் அன்வார் தெரிவித்தார்.

பணயக்கைதிகள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை விடுவிக்க ஹமாஸ் தயாராக இருப்பதையும், அரபு நாடுகள், OIC மற்றும் சர்வதேச சமூகம் முன்மொழிந்த சமாதான திட்டத்தை ஏற்கும் அதன் விருப்பத்தையும் மலேசியா பாராட்டுகிறது என்றும்  அவர் கூறினார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தவும், கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், சமாதானத் திட்டத்திற்கு உடன்படவும் இஸ்ரேலை அன்வார் வலியுறுத்தினார்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *