கம்போடியா பிரதமருடன் அன்வார் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26: கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 46வது ஆசியான் உச்சி மாநாட்டில், கம்போடியப் பிரதமர் ஹன் மானெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்.

இரு நாடுகளின் நலன் மற்றும் நன்மைக்காக மலேசியா மற்றும் கம்போடியாவின் நெருங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அன்வார் கூறினார்.

பரஸ்பர நன்மைகள் மற்றும் பகிரப்பட்ட செழிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தாக அவர் கூறினார்.

முதலீடு மற்றும் வர்த்தகம், ஹலால் தொழில், இஸ்லாமிய வங்கி, சைபர் பாதுகாப்பு, எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியே தங்கள் விவாதம் அமைந்ததாக  ஒரு முகநூல் பதிவில் கூறினார்!

Dalam  ASEAN Summit ke- 46, PM Anwar bertemu PM Kemboja membincangkan kerjasama dalam pelaburan, perdagangan, halal, perbankan Islam, keselamatan dan pendidikan demi manfaat bersama kedua negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *