ஜொகூர் போலீஸ் தலைவர் குமார் வேறு துறைக்கு மாற்றம்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், ஜூன் 29-

ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ எம். குமார் புக்கிட் அமான் குற்றப்புலனாாய்வுத்துறையின் இயக்குநராக பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் இப்பதவியை வகித்து வந்த டத்தோஸ்ரீ முகமட் ஸூ ஹைலி முகமட் ஸைன் ஜூலை 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 2023 முதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் அவர், ஜூன் 30, 2027 வரை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்த இடமாற்ற உத்தரவு நேற்று இரவு முதல் சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று ஊடகங்கள் முகமது ஷுஹைலியைத் தொடர்பு கொண்டபோது, இடமாற்ற உத்தரவு பெற்றதை உறுதிப்படுத்தினார். ஆனால் பிறகு இந்த விஷயத்தை மேலும் கருத்து தெரிவிக்க மறுத்து, நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் ஒப்படைப்பு விழாவிற்கு காத்திருக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொண்டார்.

Datuk M. Kumar dilantik sebagai Pengarah JSJ Bukit Aman menggantikan Datuk Seri Mohd Suhaily yang akan mengetuai Agensi Kawalan Sempadan Malaysia (AKSEM) mulai 1 Julai 2025 hingga 30 Jun 2027. Arahan pertukaran itu kini tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *