டாய்லெட்களில் WC என்று இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
- Muthu Kumar
- 19 Nov, 2024
வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது அனைவரும் பொது கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அந்த பலகைகளை சரியாகப் பார்த்தால் சில கழிவறைகளுக்கு வெளியே WC என்றும் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம். இதன் பொருள் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பொதுவாக கழிவறை என்பதற்கு பாத்ரூம், டாய்லெட் அல்லது ரெஸ்ட் ரூம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தைகளில் எதிலும் WC என்ற எழுத்துக்களை பார்க்க முடியாது.
குளியலறைக்கு பல பெயர்கள் உள்ளன. WC என்பது குளியலறையின் மற்றொரு பெயர். இது ஒரு சுருக்கமான எழுத்து வடிவம். அதற்கு Water Closet என்ற விரிவாக்கம் உள்ளது. இதற்கு தண்ணீருடன் கூடிய கழிவறை அல்லது குளியலறை என்று பொருள்.
1900 ஆண்டுகளில் குளியலறையை பெரும்பாலும் Water Closet என்றுதான் அழைத்திருக்கிறார்கள். அது பின்னாளில், பல பெயர்களால் குறிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், Water Closet என்பதன் சுருக்கமான WC யை மட்டும் குளியலறை அடையாளத்திற்காக குறிப்பிட்டு வருகிறார்கள்.
(குறிப்பு: இந்தக் தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *