போலீஸ்படை உயர்நெறியுடன் செயல்பட வேண்டும்-பிரதமர்!

- Muthu Kumar
- 03 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 3-
நிபுணத்துவம், உயர்நெறி, பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பாதுகாப்பு அமைப்பு என்ற தனது நிலையை அரச மலேசிய போலீஸ்படை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ்படை அதன் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார். நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயிலுடனான சந்திப்பின் போது இது குறித்து வினவியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நடப்பு சவால்களைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு உள்பட போலீஸ் படையை நவீனப்படுத்துவதும் அடங்கும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.மக்களுக்குத் தேவைப்படும் முக்கிய அமைப்பாக அரச மலேசிய போலீஸ்படை விளங்குகிறது. நாட்டின் பாதுகாப்பும் அமைதியும் தொடர்ந்து கட்டிக்காக்கப்படுவதை உறுதி செய்ய உயரிய கடப்பாடும் உத்வேகமும் தேவைப்படுகிறது என்றார் அவர்.
Perdana Menteri Anwar Ibrahim mahu Polis Diraja Malaysia diperkasa sebagai pasukan profesional, beretika dan dipercayai rakyat. Beliau menekankan kebajikan anggota tidak harus diabaikan dan menyokong pemodenan, termasuk kecerdasan buatan, demi keselamatan serta ketenteraman negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *