சில தரப்பினர் என்னை ஸாஹிட்டுக்கு எதிராகத் தூண்ட முயற்சிக்கின்றனர்!

- Muthu Kumar
- 01 Jul, 2025
ஜொகூர் பாரு, ஜூலை 1-
அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் தமக்கு இடையில் பிளவை ஏற்படுத்த சில தரப்பினர் முயன்று வருவதாக, அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
ஸாஹிட்டுக்கு எதிராக தம்மை தூண்டிவிட முற்சிக்கும் தரப்பினரின் வலையில் தாம் வீழ்ந்துவிடப் போவதில்லை என்று, ஜொகூரில் உள்ள லேடாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போது. வெளியுறவு அமைச்சருமான முஹமட் தெரிவித்தார்.அத்தகைய முயற்சியில் ஈடுபடுவோரின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்ட அவர், அவர்களின் இத்தகைய முயற்சி கட்சியை கீழறுப்புச் செய்யும் வகையில் இருப்பதாகக் கூறினார்.
"சிலர் எனக்கும் அம்னோ தலைவருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இத்தகையோரை நம்ப முடியாது என்பதால், நான் புன்னகைத்தவாறு அவர்களிடமிருந்து நழுவிச் சென்று விடுகிறேன். அவர்கள் கட்சித் தலைவரைப் பற்றி மோசமாகப் பேசுகின்றனர்."எனக்குப் பின்னால் அவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று முஹமட் கூறினார்.
கட்சித் தலைவரை ஆதரிக்கும் மிக முக்கியமான பொறுப்புக்கு உட்பட்டிருப்பதால், துணைத் தலைவர் பதவியை வகிப்பது அவ்வளவு சுலபமானதும் அல்ல என்றும் அவர் கூறினார். அம்னோவின் கவனம் மக்களுக்கு சேவை செய்வது மீதுதான் இருக்க வேண்டும் என்றும் இனம் மற்றும் சமய நலன்களுக்காகவும் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
"கட்சிக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால், ஒன்றாகச் சேர்ந்து பெற்ற வெற்றியாக அதை நாம் கருத வேண்டும். நாம் தோல்வியுற்றால், நாம் அனைவரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முஹமட் கூறினார்.
Timbalan Presiden UMNO, Mohamad Hasan menolak cubaan pihak tertentu untuk memecahbelahkan hubungan beliau dengan Presiden UMNO, Zahid Hamidi. Beliau menegaskan keutamaannya adalah kepada perpaduan parti dan berkhidmat untuk rakyat tanpa dipengaruhi agenda peribadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *