லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் சூரி?

- Muthu Kumar
- 03 Jul, 2025
லோகேஷ் இப்போது ராகவா லாரன்ஸை வைத்து 'பென்ஸ்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் சம்யுத்தா, நிவின் பாலி எனப் பலரும் நடிக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதனை அடுத்த தயாரிப்பாக சூரி படத்தைக் கையில் எடுக்கிறார் லோகேஷ் .மலையாளத்தில் 'ஆமென்', 'அங்கமாலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு', 'சுருளி' எனப் பல கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லி சேரி, சூரிக்கு ஒரு அழுத்தமான கதை ஒன்றை வைத்திருக்கிறார் என்றும், அந்த கதையை லோகேஷுக்கும், சூரிக்கும் ரொம்பவும் பிடித்துவிட்டது என்றும் அதன் பிறகே இந்த புராஜெக்ட் குறித்த பேச்சு கிளம்பியது என்று சொல்லப்படுகிறது.
லோகேஷ் இயக்கியிருக்கும் 'கூலி' படம் அடுத்த மாதம் திரைக்கு வருவதால் அதன் வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார். ஆகையால், சூரியின் படம் இன்னமும் பேச்சுவார்த்தை நிலையில்தான் உள்ளது. இப்போதைய நிலவரப்படி உறுதி செய்யப்பட வில்லை என்கிறார்கள். ஆனால், அறிவிப்புகள் வெளியானாலும் ஆச்சரியமில்லை.
தவிர, சூரி இப்போது 'மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'மண்டாடி'யில் மீனவராக நடித்து வருகிறார் சூரி. இந்தப் படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.கடலில் காட்சிகள் படமாக்க வேண்டியிருப்பதால், அதற்கான ஹோம் ஒர்க் மற்றும் ரிகர்சல்களை மேற்கொண்ட பின்னரே, படப்பிடிப்பில் இறங்கினார் சூரி.
இந்தப் படத்தை ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன் நடித்த 'செல்ஃபி' படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். சூரியின் ஜோடியாக மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், கலை இயக்குநர் கிரண், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ், டோலிவுட் நடிகர் சுஹாஸ் எனப் பலரும் நடித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.'மண்டாடி'யை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்திற்கு வருவார் என்றும், லிஜோ ஜோஸ் பெல்லி சேரி படம் உறுதியானதும், அதற்கான அறிவிப்புகள் உடனடியாக வெளியாகும் என்றும் தகவல்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *