முன்னேற்றப் பாதையை நோக்கி தொழிலாளர் கூட்டுறவு சங்கம்!

- Muthu Kumar
- 27 Jun, 2025
(நமது நிருபர்)
கோலாலம்பூர், ஜூன் 27-
நாட்டில் கூட்டுறவு தொழில்துறையில் பல்நோக்கு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் மிகச் சிறந்த முன்னேற்ற பாதையை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.பிரபல வங்கிகளின் ஒத்துழைப்புடன் தனியார் துறைகளில் முதலீடு செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என்று சங்கத்தின் தலைவர் டத்தோ குமரன் கார்மேகம் தெரிவித்தார்.
கடந்த 22ஆம் தேதி அச்சங்கத்தின் 2025க்கான ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களைச் சேர்ந்த பேராளர்கள் இந்த கூட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.
கடந்தாண்டில் 2,000 பேர் புதிதாக உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இதனையும் சேர்த்து தற்போது நாடு முழுவதும் எங்கள் சங்கத்தில் 50,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றார் அவர். நாட்டின் கூட்டுறவு ஆணைய அதிகாரி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். எல்லா விதிமுறைகளையும் பின்பற்றிக் கூட்டம் நடத்தப்படுவது குறித்து அவர் மனநிறைவு தெரிவித்தார்.
அதே வேளையில், கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் உறுப்பினர்களுக்குச் சிறப்பு உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டுறவு கழகத்தின் வருமானம் அதிகரித்து வருவதால் உறுப்பினர்களுக்குக் கணிசமான லாப ஈவு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்நோக்குத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உதவித் தலைவர் தியாகராஜன், செயலாளர் ரத்னகுமார், பொருளாளர் ஆசை தம்பி உட்பட அதன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Sektor koperasi pekerja pelbagai guna Malaysia mencatat kemajuan pesat dengan pelaburan swasta dan pertambahan ahli kepada 50,000 orang. Bantuan pendidikan dan kesihatan ditawarkan, manakala keuntungan koperasi terus meningkat, menurut pengerusi Datuk Kumaran Karmegam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *