உலகில் வேகமாக நகர்ந்து செல்லும் பல வகையான உயிரினங்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலம்!
- Muthu Kumar
- 01 Jul, 2024
உலகில் வேகமாக நகர்ந்து செல்லும் பல வகையான உயிரினங்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
நத்தை-
பெரும்பாலும் மெதுவாக நகரும் இந்த உயிரினம் மணிக்கு 48 மீட்டர் வேகத்தில் நகரும் தன்மை கொண்டவை. இதன் ஆயுட்காலம் இரண்டு முதல் பத்து வருடங்கள்.
சிலந்தி பூச்சிகள்-
வீடு மற்றும் காடுகளில் நாம் பார்க்கும் சிலந்தி பூச்சிகள் மணிக்கு 1.9 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் தன்மை கொண்டவை. இதன் ஆயுட்காலம் 1 முதல் 20 வருடங்கள் ஆகும்.
சஹாரன் எறும்புகள்-
சஹாரன் எறும்புகள் மணிக்கு 3.1 கிலோமீட்டர் வேகத்தில் நகரக் கூடியவை. இவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். அதாவது ஒரு தசாப்தம்.
பெங்குவின் பறவைகள் -
அனைவருக்கும் பிடித்த பெங்குவின் பறவைகள் மணிக்கு 3.9 கிலோமீட்டர் வேகத்தில் செல்பவை. இவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 15 வருடங்கள் ஆகும்.
ஆமைகள் -
மிக மிக மெதுவாக நகரும் என்று அனைவராலும் நினைக்கும் ஆமைகள் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தன்மை கொண்டவை. 20 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் தனி வல்லமை படைத்தவை ஆமை வகைகள்.
தேள்-
தேள் என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது கடுமையான விஷம். அந்த தேளின் நகர்வு வேகம் மணிக்கு 6 கிலோமீட்டர். இதன் ஆயுட்காலம் 3 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
முள்ளம்பன்றி -
அதிசயமான உயிரினங்களின் வரிசையில் முள்ளம்பன்றியும் ஒன்று. இவை மணிக்கு 6.4 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் தன்மை கொண்டவை. இதன் ஆயுட்காலம் 2 முதல் 5 வருடங்கள் ஆகும்.
நண்டுகள் -
பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் கையாளுவதற்கு கடினமாக இருக்கும் நண்டுகள் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கின்றன. நண்டுகள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை வாழும் வல்லமை பெற்றவை.
சிறுவகையான பல்லிகள்-
சிறுவகை பல்லிகள் நாம் அனைவரும் அறிந்தது. இவற்றின் வேகம் மணிக்கு 12 கிலோமீட்டர் ஆகும். இந்த சிறு வகையான பல்லிகள் 2 முதல் 5 வருடங்கள் வரை வாழும் தன்மை கொண்டது.
கோழிகள் -
உணவுக்காகவும், வளர்ப்புக்காகவும் அனைவருக்கும் பிடித்த கோழிகள் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். கோழிகளின் ஆயுட்காலம் 5 முதல் 10 வருடங்கள் ஆகும்.
எலிகள்-
பெரும்பாலும் தொந்தரவு பிராணி என்று கருதப்படும் எலிகள் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் செல்லகூடியவை. எலிகளின் ஆயுட்காலம் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே. சிலவகை எலிகள் 12 முதல் 20 ஆண்டுகள் வரை வாழ்பவை என நம்பப்படுகின்றன.
தவளைகள்.-
சீனர்களின் அதிர்ஷ்டமாகவும் மற்றவர்களுக்கு அருவருப்பாகவும் உணரப்படும் தவளைகள் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் தாவும் தன்மை கொண்டவை. இவற்றின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் ஆகும்.
கிவி பறவைகள்-
நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட கிவி பறவைகள் வித்தியாசமாக ஓடும் தோற்றம் பெற்றவை. மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகம் கொண்ட இவை 25 முதல் 50 வருடம் வரை வாழ்கின்றன
கொமோடோ டிராகன் -
உடும்பு இனத்தைச் சேர்ந்த கொமோடோ டிராகன் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகம் செல்லக் கூடியது. 30 ஆண்டுகள் வரை வாழ்வது இவற்றின் ஆயுட்காலம் ஆகும்.
Black Mamba அல்லது கருப்பு மாம்பா பாம்புகள் -
கடும் விஷத்துடன் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கருப்பு மாம்பா வகை பாம்புகள் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும் 11 முதல் 20 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவை.
வேகமாக செல்லும் பகுதி ஒன்றில் இடம்பெறும் உயிரினம்தான் மனிதன். அத்தனை உயிரினங்களையும், இயற்கையையும் கட்டுப்பாட்டில் வைத்து நன்மை, தீமைகளை உருவாக்கும் மனிதன் மணிக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய தன்மையை பெற்றவன். மனிதனுக்கு மட்டும்தான் ஆரோக்கியத்தை பொறுத்து ஆயுட்காலம் மாறுபடுகிறது. இருந்தாலும் சராசரியாக 90 லிருந்து 120 ஆண்டுகள் வரை வாழும் தன்மை பெற்றவன் மனிதன்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *