கோத்தா மடானி திட்டம் ஒத்தி வைக்கப்படாது - டாக்டர் ஸலிஹா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 4-

மடானி வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி விடுத்திருக்கும் கோரிக்கையை அரசாங்கம் நேற்று நிராகரித்தது.

பொதுச் சேவை ஊழியர்களுக்கு வீடுகள் தேவைப்படுவதால், அத்திட்டம் தொடரப்படும் என்று பிரதமர் இலாகா அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஸலிஹா முஸ்தப்பா தெரிவித்தார். புத்ராஜெயா அரசாங்க நிர்வாக மையத்தில் பணியாற்றும் சுமார் 17 ஆயிரம் பொதுச் சேவை ஊழியர்களுக்கு வீடுகள் தேவைப்படுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

"மடானி வீடமைப்புத் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், பொதுச் சேவை ஊழியர்களுக்குத் தேவைப்படும் வீடுகள் அல்லது தங்குமிடப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஓரளவுக்கு உதவும் என்று நேற்று வியாழக்கிழமை டாக்டர் ஸலிஹா கூறினார்.

நாட்டின் கடன் அதிகரித்து வருவது மற்றும் மக்கள் பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்கி வருவதை சுட்டிக்காட்டி, கோத்தா மடானி என்ற அத்திட்டத்தை அரசாங்கம் ஒத்தி வைக்க வேண்டும் என்று. அலோர்ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினருமான அஃப்னான் கடந்த செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி இருந்தார்.

இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதனால் ஏற்படக் கூடிய நிதிச் சுமையை எதிர்கால இளம் சந்ததியினர் சுமக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த ஜூன் 26ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்ட புத்ராஜெயாவின் பிரிசிண்ட் 19இல் மேற்கொள்ளப்பட விருக்கும் கோத்தா மடானி திட்டம், மக்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு சாதகமான ஒரு விவேகமான நகரமாக விளங்கும் என்று கூறப்பட்டது. இத்திட்டத்தை புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனம், மொத்தம் 400 கோடி வெள்ளி அரசாங்கப் பணத்தில் மேற்கொள்ள விருக்கிறது.

Kerajaan menolak desakan Pemuda PAS untuk hentikan projek perumahan Madani. Menteri Wilayah Persekutuan, Dr. Zaliha Mustafa, menegaskan projek itu penting bagi menyediakan kediaman untuk kira-kira 17,000 penjawat awam di Putrajaya walaupun berdepan cabaran ekonomi negara.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *