லிப்ட்டிற்குள் கண்ணாடிகள் வைப்பதன் காரணம் ஏன் தெரியுமா?

top-news
FREE WEBSITE AD

லிப்ட்டிற்குள் கண்ணாடிகள் வைப்பது மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவோ வைக்கப்படவில்லை .மாறாக அவை பல முக்கிய நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. 

எந்தவொரு கட்டடம் அல்லது மாலின் லிப்ட்டுக்குள் நீங்கள் நுழையும்போது, ​​உள்ளே கண்ணாடிகள் இருப்பதைக் காண முடியும். பெரும்பாலும், மக்கள் தங்களது அழகைப் பார்க்கிறார்கள், தங்கள் தலைமுடியை சரிசெய்து கொள்கிறார்கள். தங்கள் ஆடைகளை சரிசெய்து கொள்கிறார்கள் அல்லது அவர்களது தோற்றம் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனித்து கொள்கிறார்கள். ஆனால் லிஃப்டில் உள்ள கண்ணாடி குறிப்பிட்ட இந்த நோக்கத்திற்காக மட்டுமே உள்ளதா அல்லது அதற்கு பின்னால் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதை விரிவாக இங்கே பார்க்கலாம். 

பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, லிஃப்ட்டில் உள்ள கண்ணாடிகள் அலங்காரத்திற்காகவோ அல்லது மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்க்க ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவோ வைக்கப்படவில்லை. மாறாக அவை அழகுக்கு அப்பாற்பட்ட பல முக்கிய நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. 

லிஃப்டில் கண்ணாடிகள் நிறுவப்படுவதற்கான முக்கிய காரணங்கள்: 

உளவியல் பிரச்சனை: லிஃப்ட் போன்ற மூடிய அல்லது வரையறுக்கப்பட்ட இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியா அல்லது பதற்றம் போன்ற உணர்வுகளை பலர் அனுபவிக்கின்றனர். இதை போக்கும் விதமாக லிப்டிற்குள் கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் கண்ணாடிகள் லிப்டிற்குள் அதிக இடம் இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, லிஃப்ட் பெரிதாக இருப்பது போன்ற உணர்வைத் தரும். இதன் மூலம் பதற்றம் குறைக்கப்பட்டு, நிம்மதியாக பயணிக்க வசதியாக இருக்கும். குறிப்பாக குறுகிய இடங்களைப் பற்றிய பதற்றத்தை அனுபவிப்பவர்களுக்கு இது பெரிதும் உதவும். 

பாதுகாப்பு: லிப்டில் கண்ணாடிகள் இருப்பதால், அதனுள் பயணிப்பவர்கள் சுற்றுப்புறங்களை தெளிவாக பார்க்க முடிகிறது. மேலும் தன்னுடன் அல்லது தனக்கு பின்னால் இருப்பவர்களை பார்க்க இது ஏதுவாக இருக்கும். இது மற்ற பயணிகள் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருப்பதால், மக்களை பாதுகாப்பாக உணர வைக்கிறது. மேலும் லிஃப்ட் மிகவும் வெளிப்படையானது என்ற தோற்றத்தையும் தருவதுடன், பொருத்தமற்ற தவறான நடத்தைகளையும் தடுக்க உதவுகிறது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல்: சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்கள் அல்லது நடப்பதில் சிக்கல்கள் உள்ள நபர்களை எளிதாக கையாள கண்ணாடிகள் உதவுகின்றன. உதாரணமாக, சக்கர நாற்காலியில் இருப்பவர் லிஃப்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில், அவர்கள் பின்னால் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும், அவர்கள் திரும்பாமலேயே வெளியேறவும் கண்ணாடி உதவுகிறது. 

கவனச் சிதறல்: லிஃப்ட்டில் ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய மாடிக்கு சென்றடையும் வரை காத்திருக்கும்போது, மக்கள் பெரும்பாலும் பொறுமையின்றி உணர்கிறார்கள். இந்த நேரத்தில் கண்ணாடியில் பார்ப்பது அவர்களை திசை திருப்ப உதவும். அவர்களை கண்ணாடியில் பார்த்து ரசிக்கும்போது அவர்களது காத்திருப்பை குறுகியதாகவும், சலிப்பில்லாமலும் தோன்ற வைத்து ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. 

லிஃப்ட்களில் கண்ணாடிகளை கட்டாயமாக்கும் ஜப்பானின் எலிவேட்டர் அசோசியேஷனின் வழிகாட்டுதல் இந்த நன்மைகள் பற்றிய அவர்களின் புரிதலை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக பயனர்களின் உளவியல் ஆறுதல் மற்றும் பாதுகாப்பு பற்றியும் விளக்குகிறது. 

சுருக்கமாக, லிஃப்ட் கண்ணாடிகள் மன நலத்தை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பை அதிகரிப்பதிலும், ஒட்டுமொத்த லிஃப்ட் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *