Pearly Tan - Thinaah நிராகரிப்பா? பூப்பந்து ஆணையம் விளக்கம்!

top-news

ஜூலை 1,

தேசிய இரட்டையர் பூப்பந்து வீராங்கனைகளான Pearly Tan - Thinaah Muralitharan இணையர் தொடர்ந்து தேசிய பூப்பந்தாட்டக்காரர்களாகத் தொடர்வார்களா இல்லையா என்பது குறித்து தேசிய பூப்பந்து ஆணையத்தின் தலைவரும் அமைச்சருமான Tengku Datuk Seri Zafrul Tengku Abdul விளக்கமளித்தார். இருவருடன் தேசிய பூப்பந்து ஆணையம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் அவர்களுடனான உடன்படிக்கையை நீட்டிப்பதில் இரு தரப்பினர்களிடையில் முரண்கள் இருப்பதால் தேசிய பூப்பந்து ஆணையம் Pearly Tan - Thinaah Muralitharan இருவருக்கும் ஜூலை 15 வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தேசிய பூப்பந்து ஆணையத்தின் தலைவரும் அமைச்சருமான Tengku Datuk Seri Zafrul Tengku Abdul தெரிவித்தார். 


உலகின் மூன்றாம் நிலை இரட்டையர் பூப்பந்து வீரர்கள் எனும் தகுதியுள்ள Pearly Tan - Thinaah Muralitharan இணையர் ஜூலை 15 வரையில் தேசிய பூப்பந்து வீரர்களாக அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்பர் என்றும் தேசிய பூப்பந்து ஆணையத்துடனான உடன்படிக்கையை அவர்கள் நீட்டிக்க விரும்பாத நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதையும் தேசிய பூப்பந்து ஆணையத்தின் தலைவரும் அமைச்சருமான Tengku Datuk Seri Zafrul Tengku Abdul சுட்டிக்காட்டினார். தேசிய பூப்பந்து ஆணையம் எந்தவொரு விளையாட்டாளரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை, அதே வேளையில் விளையாட்டாளர்கள் முன்வைக்கும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விடவும் மேலான கோரிக்கைகளையும் தேசிய பூப்பந்து ஆணையம் ஏற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை என்றும் இருப்பினும் Pearly Tan - Thinaah Muralitharan இணையருக்கு அவர்களின் கோரிக்கைகளை மறு ஆய்வு செய்ய ஜூலை 15 வரையில் தேசிய பூப்பந்து ஆணையம் கால அவகாசம் வழங்கியிருப்பதாக Tengku Datuk Seri Zafrul Tengku Abdul விளக்கமளித்தார்.


Pearly Tan-Thinaah Muralitharan masih berstatus pemain badminton kebangsaan sehingga 15 Julai selepas perbincangan kontrak dengan Persatuan Badminton Kebangsaan Malaysia (BAM) belum mencapai kata sepakat. Tengku Zafrul menjelaskan BAM beri ruang untuk semakan semula permintaan mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *