1,091 மாணவர்களுக்கு HIV தொற்று! சுகாதார அமைச்சு அதிர்ச்சி!

- Sangeetha K Loganathan
- 01 Jul, 2025
ஜூலை 1,
பல்கலைக்கழக மாணவர்களிடையே HIV தொற்று அதிகரித்து வருவதாகத் துணை சுகாதார அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni தெரிவித்தார். கடந்த 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே 1,091 பல்கலைக்கழக மாணவர்கள் HIV எனும் ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக துணை சுகாதார அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் 18 முதல் 19 வயதினர் என்றும் இவர்கள் பல்கலைக்கழகம் வந்த 6 மாதத்திற்குள் HIV எனும் ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக Datuk Lukanisman Awang Sauni தெரிவித்தார்.
இளைஞர்களிடையே HIV குறித்தான முழுமையான விழிப்புணர்வுகள் தேவை என்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே HIV தீவிரமாகப் பரவி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக துணை சுகாதார அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni நம்பிக்கை அளித்தார். HIV குறித்தான விழிப்புணர்வுகளை நடத்த பொது இயக்கங்கள் முன் வந்திருப்பதாகவும் முதற்கட்டமாக அனைத்து உயர்கல்விக் கூடங்களிலும் இந்த விழிப்புணர்வுகளை நடத்த சுகாதார அமைச்சு எண்ணம் கொண்டிருப்பதாகவும் துணை சுகாதார அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni தெரிவித்தார்.
Kementerian Kesihatan terkejut dengan peningkatan 1,091 pelajar universiti dijangkiti HIV sejak 2020 hingga 2024, majoritinya berusia 18–19 tahun. Timbalan Menteri Kesihatan Lukanisman Sauni beri jaminan tindakan segera dan program kesedaran di kampus akan dipergiat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *