2 சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்த படகின் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியாகக் கைது!

- Sangeetha K Loganathan
- 29 Jun, 2025
ஜூன் 29,
Pulau Perhentian தீவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததுடன் 2 சிறுமிகளும் கடலில் மூழ்கி இறந்த சம்பவத்தில் 20 வயதுள்ள படகு ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகக் காவல் துறை கண்டறிந்துள்ளதாக Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார். 20 வயது படகு ஓட்டுநரின் மீது முன்னமே போதைப்பொருள் உட்பட 5 குற்றங்களில் சம்மந்தப்பட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று உயிர்களைப் பலிகொண்ட இந்த துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 20 வயதுடைய உள்ளூர் நபர் இப்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்மந்தப்பட்ட படகில் பயணித்தவர்கள் சம்பவம் நடந்தபோது அனைத்து பயணிகளும் பாதுகாப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை என்றும் படகில் பயணிகள் பாதுகாப்பிற்காக மிதவை அங்கியும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலில் மூழ்கிய படகு தனியார் நபருக்குச் சொந்தமான படகு என Pulau Perhentian சுற்றுலா துறை தெரிவித்துள்ள நிலையில் நீர் நிலைகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையின் போதும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பது அவசியம் என Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார். இந்த துயரச் சம்பவத்தில் 40 வயதுடைய Arumugam Sativeloவும் அவரின் 3 வயது மகள் Sarrvihka Sativeloவும் , 10 வயது Vennpani Vijeya Raj எனும் சிறுமி என மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
Tragedi bot terbalik di Pulau Perhentian yang meragut tiga nyawa didapati berpunca sebahagiannya kerana pemandu bot berusia 20 tahun positif dadah dan mempunyai lima rekod jenayah lampau. Polis sahkan mangsa tidak memakai jaket keselamatan semasa kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *