நம்பிக்கை மோசடியில் நிறுவன உரிமையாளர் கைது!

top-news

ஜூலை 4,


சாலை போக்குவரத்து JPJ சோதனையில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான 3 லாரிகளின் பாகங்களை மாற்றியமைத்து சோதனைக்கு அனுப்பிய நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 41 வயதான நிறுவன உரிமையாளர் இன்று காலை Sesyen நீதிமன்றத்தில் தன் மீதான குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரியதுடன் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்தார். கைது செய்யப்பட்டவர் 41 வயது Sahela Abdul Rahim லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நிறுவன உரிமையாளர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் Taman Daya சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அலுவலகத்தில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான 3 லாரிகளின் பாகங்களை மாற்றியமைத்ததாகவும் மாற்றியமைக்கப்பட்ட பாகங்களின் மதிப்பு RM150,000 என்றும் தெரிய வந்துள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் சிறையும் பிரம்படியுடன் அபராதமும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்டவரின் ஜாமின் மனுவை ஏற்றுக் கொண்டு RM10,000 ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன் அடுத்த நீதிமன்ற விசாரணை செப்டம்பர் 19 என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Pemilik syarikat berusia 41 tahun dituduh menipu dengan mengubah suai bahagian tiga lori syarikatnya bernilai RM150,000 sebelum dihantar ke JPJ untuk pemeriksaan. Dia mengaku tidak bersalah di Mahkamah Sesyen dan dijamin RM10,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *