அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு விண்ணப்பம் செய்தவரின் வங்கியிலிருந்து RM164,000 மாயம்!

top-news

ஜூன் 30,


சமூக வலைத்தலத்தில் காணப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பம் செய்த 60 வயது ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கியிலிருந்த RM164,000 சேமிப்புப் பணம் மாயமானதாகப் பாதிக்கப்பட்ட 60 வயது முன்னாள் அசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தலத்தில் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு விண்ணப்பம் செய்ததும் அவரின் மின்னஞ்சலுக்கு வங்கிக் கணக்குகளைப் பூர்த்தி செய்யும்படி வலியுறுத்தப்பட்டதாகவும், வங்கிக் கணக்குகளின் விவரங்களை அவர் பூர்த்தி செய்ததும் தனது வங்கியில் இருந்த RM164,000 பணம் மாயமானதாகவும் BESUT மாவட்டக் காவல் நிலையத்தில் கடந்த வியாழன் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 60 வயது ஓய்வுப் பெற்ற ஆசிரியரின் வங்கியிலிருந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 39 முறை பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக BESUT மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad @Abu தெரிவித்தார். சம்மந்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கல் போலியானது என்றும் வெளிநாட்டு முகநூல் கணக்கு சம்மந்தப்பட்டிருப்பதாகவும் Azamuddin Ahmad @Abu தெரிவித்தார்.


Seorang pesara guru berusia 60 tahun kerugian RM164,000 selepas mengisi maklumat bank melalui pautan cabutan bertuah di media sosial. Wang simpanan dipindahkan ke 39 akaun berbeza. Kes disiasat sebagai penipuan cabutan bertuah palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *