RM 5 மில்லியன் பணமோசடி வழக்கில் நால்வர் கைது!

top-news

ஜூலை 2,


வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு வரவழைக்கும் விண்ணப்பத்தில் போலியானத் தகவல்களைப் பயன்படுத்திய இரு நிறுவன உரிமையாளர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக மலேசியா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களும் RM 5 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான விண்ணப்பத்தைக் கடந்த 2019 முதல் 2023 வரைக்கான குத்தகையில் இந்த மோசடியை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை 6 மணியளவில் சபா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் அவர்களைக் கைது செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட நால்வரும் PTW எனும் வெளிநாட்டுத்தொழிலாளர்களுக்கான பெர்மிட்டுகளைப் பெற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிய வந்துள்ளது.


Empat individu termasuk dua pemilik syarikat ditahan SPRM kerana disyaki terlibat dalam penipuan permohonan pekerja asing bernilai RM5 juta dari 2019 hingga 2023. Mereka dipercayai mengemukakan dokumen palsu bagi mendapatkan permit kerja pekerja asing di Sabah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *